பிறை தெரிந்தது... ரமலான் பண்டிகை கொண்டாட்டம்..இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..கட்டித்தழுவி வாழ்த்து
சென்னை: ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஏராளமானோர் கொண்டனர்
புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை இன்று ரமலான் கொண்டாடப்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இணைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகையையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் நேற்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications