Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலில் நிற்காதீங்க.. எங்களுக்கு பிரச்சாரம் பண்ணுங்க! விஜயிடம் பிரஷர் போடும் டெல்லி? புது பார்முலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால்.. தேர்தலிலேயே நிற்காதீங்கா.. எங்களுக்கு ஆதரவாக மட்டும் பிரச்சாரம் செய்யுங்கள் என்று டெல்லியில் சில பெரிய தலைகள் விஜய்க்கு பிரஷர் போடுவதாக கூறப்படுகிறது.

இதற்காக டெல்லி தலைகள் இரண்டு பிளான் வைத்து உள்ளார்களாம். ஒன்று கூட்டணி பிளான். இல்லை என்றால் பிரச்சாரம் பிளான் என்று பிரித்து உள்ளார்களாம்.

TVK Vijay

பிளான் 1 - கூட்டணி

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தமிழக எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி கணக்கீடுகளில் ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளார் என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயின் அரசியல் கருத்துகளுக்கும், அவரின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கும்.. பாஜகவிற்கும் இடையே தெளிவான ஒற்றுமை இருப்பதாக பாஜக தலைமை கருதுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக தோல்விக்கு, திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைய வேண்டும்; வாக்குகளின் சிதறல் ஆளும் கட்சிக்கு மட்டுமே சாதகமாகும் என டெல்லி தலைமை தீவிரமாக நம்புகிறதாம். விஜயின் பொது உரைகள் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும், அவரின் விமர்சனங்கள் அனைத்தும் திமுகவை நோக்கியே உள்ளன என அவர் கருதுகிறார்.

பாஜக - தவெக இடையே இப்போது வரை கூட்டணி இல்லை என்றாலும், திமுக எதிர்ப்பு அரசியலில் விஜய் செல்வாக்கு செலுத்துவதாக பாஜக பார்க்கிறது. மாநிலத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் பாஜகவின் நோக்கத்துடன் விஜயின் நிலைப்பாடு ஒத்துப்போகிறது என்பதை பாஜக மூத்த தலைவர்கள் ஏற்கின்றனர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால், பாஜகவும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக, கூட்டணியின் மாநில அளவிலான வியூகத்தில் ஒரு முக்கிய பங்காளியாகத் தொடரும் என்பதையும் இத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்தும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சாத்தியக்கூறுகளை பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதச்சார்பின்மை கருத்தில் காங்கிரசுடன் இயல்பான கூட்டாளிகள் என்று தவெக கடந்த வாரம் அறிவித்த பின்னரே, பா.ஜ.கவின் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன.காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிளான் 2 - பிரச்சாரம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால்.. தேர்தலிலேயே நிற்காதீங்கா.. எங்களுக்கு ஆதரவாக மட்டும் பிரச்சாரம் செய்யுங்கள் என்று டெல்லியில் சில பெரிய தலைகள் விஜய்க்கு பிரஷர் போடுவதாக கூறப்படுகிறது.

1. அதாவது தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதம்தான் இருக்கிறது. நீங்கள் தேர்தல் பணிகளை செய்ய முடியாது. அதனால் கூட்டணிக்கு வாருங்கள்.. இல்லையென்றால் கட்சியை கலைத்துவிட்டு எங்களுக்கு பிரச்சாரம் செய்யுங்கள். தேர்தலில் நிற்காமல் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று வாதம் வைத்துள்ளாராம்.

2. உங்களுக்கு தேர்தலில் நிற்க சின்னம் கூட உறுதியாகவில்லை. அதனால் இனி சின்னத்தை மக்களிடம் வேகமாக கொண்டு செல்ல முடியாது.

3. டெல்லியில் சில தலைகள் விஜயிடம் மறைமுகமாக இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

4. பாஜகவை சாராத இவர்கள்.. பாஜகவிற்கு ஆதரவாக இந்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வையுங்கள் அல்லது தேர்தலில் நிற்காமல் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று வாதம் வைத்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+