ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு அறிவிப்பு..ரேஷன் கார்டுகளுக்கும் இ-கேஒய்சி வருகிறது.. பரபர புதுச்சேரி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருககிறது.. புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளின், இ-கேஓய்சி சரிபார்ப்பு பொது சேவை மையங்களின் வாயிலாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத்தவிர, பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்தவகையில், நம்முடைய மாநிலத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயனாளிகள் ரேஷன் வாங்கி வருகின்றனர்.
அரசின் உதவித்திட்டங்கள்: அரசின் உதவிகளை எளிதாக பெற வேண்டுமானால், ரேஷன் கார்டுகள் மிக மிக அவசியமாகும்.. எனினும், மேற்கண்ட சலுகைகளை பெறுவதற்காக போலி ரேஷன் கடைகளின் எண்ணிக்கை பெருகி கொண்டிருக்கிறது.. இதனால், மோசடிகளும் பெரிய அளவில் நடப்பாக தெரிகிறது.
அதனால்தான், மோசடிகளை தடுத்து, அரசின் திட்டங்களும், உதவிகளும், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே, ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டுள்ளது.
பெருகும் முறைகேடுகள்: அதுமட்டுமல்ல, உணவு தானியங்களை விநியோகிப்பதில் எந்தவிதமான முறைகேடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த அரசால் ஒரு வலுவான அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசு இப்படியொரு நிபந்தனையை விதித்துள்ளது.
அதன்படி, ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப தலைவர், உறுப்பினர்களின் ஆதார் எண், பையோமெட்ரிக் பதிவுகள் அனைத்தும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களின் விவரங்கள் சரியாக இருக்கும் வகையில் இ--கே.ஒய்.சி., பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய உணவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
கால அவகாசம்: தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு, https://tnpds.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அருகில் இருக்கும் அரசு இசேவை மையங்களுக்கு சென்றும் ரேஷன் கார்டில் கேஓய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி வரை காலஅவகாசமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.. புதுச்சேரியை பொறுத்தவரை, 6 வருடங்களுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து, இலவச அரிசி, குடிமை பொருள் வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.. இதனைத்தொடர்ந்து, ரேஷன் கடைகளை திறப்பதற்கான ஏற்பாட்டில், குடிமை பொருள் வழங்கல் துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
பொதுசேவை மையம்: ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்க்கும் நடவடிக்கையை குடிமைப் பொருள் வழங்கல் துறை முடுக்கிவிட்டிருப்பதாகவும், இந்த பணியை மேற்கொள்ள பொது சேவை மையத்தை அம்மாநில அரசு தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் செயல்படாததால், இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாததால், கைரேகை பதிவு, ஆதார் எண் சரிபார்ப்பிற்கு பொது சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ள அரசு முடிவு செய்து, இந்த திருத்தத்தினை கொண்டு வந்திருக்கிறது.
ஆன்லைன் சேவை: அதன்படி, இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பினை ஆன்லைன் மூலமாகவும், அல்லது நேரிலும் செய்யலாம். ஒருவேளை ஆன்லைனில் செய்ய முடியாவிட்டால், அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் உங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களைக் கொடுத்து எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஓய்.சி., சரிபார்ப்பு ஆரம்ப நிலையில் மட்டுமே தற்போது உள்ள நிலையில், இந்த சரிபார்ப்பு பணியை ஆன்லைன் அல்லது ஆப் லைனில் செய்வதற்கான வழிமுறை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன்கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக 2016ல் புகார் எழுந்ததையடுத்து, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டு ரேஷன் கடைகளும் மூடப்பட்டன.
பிறகு, மத்திய அரசின் உத்தரவுப்படி நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கியில் செலுத்தும் நடைமுறையை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த 2019ல் ரேஷன் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இப்போது மீடண்டும் 6 ஆண்டுகள் கழித்து கடைகள் திறக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications