"செத்தா.. நாங்க பெத்த 3 பிள்ளைகளும் கொள்ளி வைக்க கூடாது".. தற்கொலை செய்த முதிய தம்பதி.. பசி கொடுமை!
பட்டினியில் முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்
சென்சென்னை: கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம் போல.. பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. "எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளனர்.
சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. அவர்கள் 2பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய்விட்டனர்.. கடைசி மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. அதனால் தம்பதியுடனேயே அவர் வசித்து வந்தார்.
ஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு காசு தருவதில்லையாம்.. பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. இதனால் பசியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.. அதனால், வயதானதையும் பொருட்படுத்தாமல், செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்.

வேலை
இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. அதனால் அந்த வேலையும் பறிபோனது.. இதனால் வறுமை அவர்களை வாட்டியது.. பசி அவர்களை துரத்தியது.. கடைசியில் 2 பேரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்... இந்த தகவல் கிடைத்ததும், செம்பியம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் ஒரு லட்டர் கிடைத்தது.. அதை தற்கொலைக்கு முன்பு 2 பேரும் எழுதி வைத்திருந்தனர்.

பிணங்கள்
"நாங்க சாவதற்கு யாரும் காரணமில்லை.. ஆனால், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளி போட வேணாம்.. எங்கள் சடலத்தை அனாதை பிணங்களாக அடக்கம் செய்துவிடுங்கள்.. எங்களை போலீசார்தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தனர்.. இதையடுத்து, 2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலங்கள்
இதையடுத்து, அவர்களது ஆசைப்படியே உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், சடலங்கள் அடக்கம் செய்யப்படும் என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையையும் ஏற்படுத்தி வருகிறது .

மனிதாபிமானம்
இந்த லாக்டவுன் எண்ணற்ற பாடங்களை கற்று தந்துகொண்டிருக்கிறது.. கொடிய கொரோனாவை விடவும், சில மனித மிருகங்களின் நடவடிக்கைகள் நமக்கு கடுமையான அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. மனிதாபிமானத்தின் எல்லைகள் எதுவென்றுகூட நம்மால் எடை போட முடியவில்லை.. சாகும்போதுகூட பெற்ற பிள்ளைகளை அம்மாவும், அப்பாவும் காட்டி தரவில்லை என்பதை இதுபோன்ற நன்றிகெட்ட மனிதர்கள் உணர வேண்டும்... ஆனால் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது.. "பசி" !
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications