18 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்த ரெடி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த ரெடியாக உள்ளோம் என்று, தழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சத்திய பிரதா சாஹூ பங்கேற்றார்.

இதன்பிறகு, நிருபர்களிடம் சத்திய பிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த தயாராக உள்ளோம்.
இம்மாதம், 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள 37,000 ஓட்டுச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகள் குறித்த கேள்விக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications