உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாத விசிக.. தேர்தல் ஆணையத்தில் இன்று சின்னம் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    யாருக்கு கொடுக்கலாம்?..தீவிர யோசனையில் திருமாவளவன்

    டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்கிறது.

    திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்தச 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.

    Election Commission allots new symbol for VCK

    இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னத்தையே ஒதுக்கக் கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 24-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் சின்னம் இல்லாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யவில்லை.

    மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்தது. எனவே அக்கட்சி புதிய சின்னத்தை கோருமா இல்லை ஏற்கெனவே போட்டியிட்ட நட்சத்திரம், மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களை கோருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்த நிலையில் புதிய சின்னம் ஒதுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அக்கட்சிக்கு இன்று புதிய சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் திமுக கோரியபடி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திருமாவளவனுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+