சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரணகளத்தில் ஒரு குளுகுளு.. தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு.. அதிருமா போர் முழக்கம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற, வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், வேண்டிய தொகுதிகள் கிடைக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது மட்டுமின்றி, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறது.

Election commission allotted murasu symbol for dmdk

தற்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த சூழலில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று தேமுதிக கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொடக்க காலம் முதல் முரசு சின்னத்தில் போட்டியிட்டு வரும் தேமுதிகவுக்கு இந்த தேர்தலிலும் முரசு சின்னம் கிடைத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் இந்த முரசு சின்னம் ஒதுக்கீடு என்பது பொருந்தும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பாமகவுக்கு அதன் மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது.

வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக

இந்நிலையில், தனித்து போட்டியிடுவதா?, கூட்டணி வைப்பதா? என்பதில் இன்னமும் தேமுதிகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், விரைவில் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
murasu symbol dmdk - தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X