1 மணி நேரம்.. சல்லடை போட்டு சோதனை.. கலாநிதி வீராசாமியிடம் தேர்தல் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!
நேற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: நேற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர்களில் இவர் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில் கலாநிதி வீராசாமி தேர்தலை முன்னிட்டு நேற்று தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். முக்கியமாக வடசென்னை நாடாளுமன்ற பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.
அவர் பிரச்சாரம் முடித்துவிட்டு இரவு திரும்பும் போது, தேர்தல் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவரது வாகனம் சோதனை செய்யப்பட்டது.
காரின் கதவு, டிக்கி, காரின் அடிப்பகுதி என்று அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் பணமோ, நகையோ சிக்காததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து கலாநிதி வீராசாமியின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்தவர்களின் வாகனங்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications