முடிவுகள் மாறுமோ? வேலூர், விருதுநகர்.. 20 வாக்குச் சாவடி வாக்குகளை சரிபார்க்க பாஜக,தேமுதிக மனு!
சென்னை: வேலூர், விருதுநகர் லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 20 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விவரங்களை சரி பார்க்க வேண்டும் என பாஜக மற்றும் தேமுதிக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 14 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என தேமுதிக மனு அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் ஆணையம் ஜூன் 1-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சர்பார்க்கக் கோரி, மக்களவைத் தேர்தல் தொடர்பாக 8 மனுக்களும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பாக 3 மனுக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து 20 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்களை சரி பார்க்கக் கோரி பாஜக, தேமுதிக தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் லோக்சபா தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே வி குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டசபை தொகுதிகளில் தலா 1 வாக்குச் சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என பாஜக மனு கொடுத்துள்ளது. வேலூரில் பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இத்தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் 2- வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல விருதுநகர் லோக்சபா தொகுதியில், விருதுநகர் சட்டசபை தொகுதியில் மட்டும் 14 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திர விவரங்கள் சரி பார்க்கப்பட வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிகவின் விஜய பிரபாகர் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இத்தொகுதியில் வென்றிருந்தார்.
இதேபோல தெலுங்கானாவில் ஜஹிரபாத் லோக்சபா தொகுதியில் 20 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்கு விவரங்களை சரிபார்க்க பாஜக மனு கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் இத்தகைய மனுக்களை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications