Election Exclusive: கிரிஷுக்கு கல்தா கொடுக்கும் காங்., சீனுக்கு வரும் வேணு! திமுக கணக்கா? ஆனாலும் விஜய் குறுக்க வருவாரா?
சென்னை: காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி உறவு சற்று சிக்கலானதாக மாறியிருக்கிறது. ஆட்சியில் பங்கு இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்ட நிலையில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் மாற்றப்பட்டு கேசி வேணுகோபால் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. திமுக தலைமையின் தலையீடு காரணமாகவே இந்த மாற்றம் என சொல்லப்பட்டாலும், கேசி வேணுகோபால் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் தேர்தலை சந்திக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
சமீப காலமாக தமிழக வெற்றி கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்ற கழகத்துடனான கூட்டணியே தொடரும் வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்த சூழலில் காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களாக நடத்தி வரும் ஆலோசனைகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களான பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரை தனியே அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வரும் தலைவர்களுடன் நடந்த இந்த சந்திப்பு, காங்கிரஸ் அடுத்த கட்ட அரசியல் திசை குறித்து சிந்தித்து வருவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டை திமுக தலைமை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்ன சமீபத்திய கருத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரஸுடன் உள்ள அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவு வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டது, இரு கட்சிகளும் உறவைத் தொடர விரும்புகின்றன என்ற அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் பங்கு கோரிக்கை
காங்கிரஸ் தரப்பில், தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் செல்வாக்கு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறைந்தது 35 தொகுதிகளுக்குக் குறையாமல் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும், உள்ளாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளில் உரிய பங்கு குறித்து முன்கூட்டியே உடன்பாடு தேவை என்ற நிலைப்பாடும் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல் சூழலில் முக்கியமான மாற்றமாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த கிரிஷ் ஷோடங்கர் மீது திமுக தரப்பில் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
கே.சி.வேணுகோபால்
இதன் பின்னணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தமிழகத்திற்கு வர உள்ளார். அவர் சென்னை வருகையின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி தொடர்பான கருத்துகளை கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை இறுதி முடிவை எடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் பங்கு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
விஜய் அரசியல்
அதே நேரத்தில் கே சி வேணுகோபால் மீதும் திமுகவுக்கு சிறிய சந்தேகம் இருக்கிறது. காரணம் விஜய் உடன் ஆரம்பத்திலிருந்து பேசி வருபவர் கேசி வேணுகோபால் தான். காரணம் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டுமல்லாது கேரளா காங்கிரஸ் மீது அவர் வைத்திருக்கும் சில கணக்குகள் தான் காரணம். தமிழகத்தில் விஜயுடன் கூட்டணி அமைந்தால் கேரளா காங்கிரசுக்கும் லாபம் இருக்கிறது. காரணம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் விஜய்க்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தல்
மேலும் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக பல இடங்களில் அவர்கள் விஜயின் பேனரை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் காங்கிரசுடன் விஜய் கூட்டணி அமைத்தால் கேரளாவிலும் காங்கிரஸ் விஜய் கூட்டணி அமையும். இதனால் தற்போது கேரளாவில் எழுச்சி பெற்று வரும் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்பது தான் கேசி வேணுகோபாலின் கருத்து. இதை அடுத்து காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications