Election Exclusive: உடையும் காங்., கப்பல்? அப்போ மூப்பனார்! இப்போ பெருந்தகை? சீரியஸாகும் பஞ்சாயத்து! யோசிக்கும் டெல்லி!
சென்னை: தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில் காங்கிரஸின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. திமுக - தவெக என இருபுறமும் காங்கிரஸ் போக்கு காட்டி வரும் நிலையில் எங்கு சென்றாலும் காங்கிரஸ் என்ற கப்பல் உடைவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவை காரணமாக வைத்து மூப்பனார் காங்கிரசை உடைத்த கதை, தற்போது தவெகவை காரணம் காட்டி செல்வப் பெருந்தகையால் மீண்டும் திரும்பலாம் என்கின்றனர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக மிக உறுதியாக இருந்த காங்கிரஸ் திமுக கூட்டணி உறவில் சிக்கல் எழுந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையுடன் திமுக தலைமையை நெருக்கி வருகிறது காங்கிரஸ்.
அதற்கெல்லாம் இடமே இல்லை என உறுதியாக சொல்லிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த பஞ்சாயத்து டெல்லி வரை செய்த நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அமைதி காக்க வேண்டும் என சமாதானம் செய்து வைத்திருக்கிறது.

காங்கிரஸ் திமுக கூட்டணி
இது ஒரு புறம் இருக்க மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் திமுக கூட்டணி வேண்டாம் என தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். திமுக கூட்டணி தான் வேண்டும் என செல்வ பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கூறுகின்றனர். நிலைமை இப்படி இருக்க காங்கிரஸ் உடன் சென்றால் என்ன லாபம் என யோசிக்க ஆரம்பித்து இருக்கிறது திமுக தலைமை. மேலும் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் சில தலைவர்கள் வெளியேறலாம் எனவும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வெளியேறலாம் என சொல்லப்படுகிறது.
தமாகா பிளவு
1996இல் மூப்பனார் உடைத்த காங்கிரஸின் கதை மீண்டும் நடக்கலாம் என்கின்றனர். தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக முடிவெடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கான மிகப்பெரிய அரசியல் பாடத்தை 1996-ஆம் ஆண்டு அனுபவித்தது டெல்லி காங்கிரஸ் தலைமை என்பதையும் கவனிக்க வேண்டும். 1996-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் அதிமுகவுக்கு எதிராக மக்கள் மனநிலை கடுமையாக இருந்தது. அந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக் கொண்ட ஜி.கே. மூப்பனார், அதிமுக கூட்டணியில் தொடருவது அரசியல் ரீதியாக பாதகமாகும் என்று எச்சரித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ்
ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமை அவரது கருத்தை ஏற்கவில்லை. இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியிலேயே பிளவு ஏற்பட்டது. பின்னர் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் அளித்த ஆதரவும் அரசியல் களத்தை மாற்றிய முக்கிய காரணமாக கருதப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த முடிவு தொண்டர்களின் மனநிலையை புறக்கணித்ததன் விளைவாக பார்க்கப்பட்டது.
உட்கட்சி மோதல்
முப்பது ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதேபோன்ற அரசியல் சிக்கல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீண்ட காலமாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே நிலைத்திருந்த கூட்டணி, தற்போது பல்வேறு காரணங்களால் உறுதியற்ற நிலையில் உள்ளது. அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகள் கட்சிக்குள் விவாதத்தை அதிகரித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள், புதிய அரசியல் வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
தவெக கூட்டணி பேச்சு
குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் குறித்து கட்சிக்குள் பேச்சுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த சாத்தியம் தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிக தொகுதிகளில் தனித்த அடையாளத்துடன் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை ஒரு பகுதியினரிடம் உருவாகியுள்ளது. அதேசமயம், நீண்ட காலமாக உருவான கூட்டணி அரசியல் அனுபவத்தைத் தொடர வேண்டும் என்று நினைக்கும் தலைவர்களும் காங்கிரஸில் உள்ளனர்.
கூட்டணி பதற்றம்
திமுக கூட்டணியில் தொடர்வதே அரசியல் ரீதியாக பாதுகாப்பான முடிவு என அவர்கள் கருதுகின்றனர். இதனால் கட்சிக்குள் இரண்டு கருத்துக்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்றால், 1996-ஆம் ஆண்டு போல கட்சிக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டெல்லி தலைமை
ஆனால் அப்போதைய பிளவு தொண்டர்களின் மனநிலையை பிரதிபலித்ததாக கருதப்பட்டாலும், இம்முறை அது தலைமை மட்டத்தில் உருவாகும் அரசியல் முடிவுகளால் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. மேலும், டெல்லி காங்கிரஸ் தலைமையின் இறுதி முடிவு தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். கூட்டணி அரசியலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையுடன் தேசிய தலைமை காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!











Click it and Unblock the Notifications