Election Exclusive: கொங்கு கோட்டையில் டீலை முடித்த வேலுமணி.. செந்தில் பாலாஜிக்கே தெரியாத சீக்ரெட்! அப்செட்டான அறிவாலயம்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகி வருகிறது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்து விட்டன. ஆனால், ஓரளவு மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சியான தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்பது குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை. இந்த நிலையில் ஈஷாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் எஸ்பி வேலுமணியின் பிரேமலதாவும் பங்கேற்றனர்.
பொதுவெளியில் சந்தித்தால் கூட்டணி என்ற பேச்சு வெளிப்படையாக தெரியும் என்பதால் தான் ஈசாவில் வைத்து பேச்சு வார்த்தையை முடித்தார் என்கின்றனர். மேலும் நண்பர் ஒருவரது வீட்டில் எஸ்பி வேலுமணியும் பிரேமலதாவும் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணி உறுதி என்கின்றனர் அதிமுகவினர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன.

பிரேமலதா விஜயகாந்த்
கடந்த தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த கூட்டணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், தேவையான இடங்களில் புதிய கட்சிகளையும் இணைத்துக்கொள்ள திமுக திட்டமிட்டு வருகிறது. மறுபுறம், அதிமுகவும் வலுவான கூட்டணி அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த அரசியல் சூழலில், தேமுதிக தற்போது "மதில் மேல் பூனை" போல எந்தப் பக்கம் சாய்வது என்ற முடிவை எடுக்காமல் நிற்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தேமுதிக அதிமுக கூட்டணி
தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு அளவு வாக்கு வங்கி இருப்பதால், தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திமுகவும் அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக இரு தரப்புகளுடனும் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் இந்த சூழலில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் வளாகத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா அரசியல் ரீதியாக பேசப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. விழா மேடைக்கு அருகில் முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்தில் எஸ்.பி.வேலுமணியும் பிரேமலதாவும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
ஈஷா சிவராத்திரி அரசியல்
விழா நடைபெறும் போது, சத்குரு ஜக்கி வாசுதேவ் முக்கிய விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தினார். அந்த நேரத்தில் பிரேமலதாவை அவருக்கு எஸ்.பி.வேலுமணி அறிமுகப்படுத்திய காட்சி திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் பிரேமலதாவின் பங்கேற்பு பொதுமக்களுக்கு தெரிய வந்தது. மார்ச் 1-ம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ள என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அதற்குள் கூட்டணி அமைப்பை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
எஸ்பி வேலுமணி சந்திப்பு
அந்த கூட்டத்தில் மற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் தேமுதிக தலைவரும் மேடையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிப்பவர் எஸ்.பி.வேலுமணி என்பதால், தொகுதி பங்கீடு குறித்து பேசவே பிரேமலதா கோவை வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்மீக நம்பிக்கை கொண்டவர் என்பதால் சிவராத்திரி நாளையே சந்திப்புக்காக தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ரகசிய பேச்சு
விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் பிரேமலதா ஈஷா வளாகத்தில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் சென்றதாகவும், அங்கு எஸ்.பி.வேலுமணியுடன் மீண்டும் பேச்சு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மூலம் கூட்டணி தொடர்பான பேச்சு முன்னேறியிருக்கலாம் என்று சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவிற்கான தொகுதிகள் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுக செந்தில் பாலாஜி
அதே நேரத்தில், இது இயல்பான சந்திப்பே தவிர அரசியல் முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு அந்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது. கூட்டணி அறிவிப்பு வரும் வரை இத்தகைய சந்திப்புகள் அரசியல் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. சிவராத்திரி விழா ஒரு ஆன்மீக நிகழ்வாக இருந்தாலும், அதில் நடந்த இந்த சந்திப்பு தேர்தல் சூழலில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் எஸ்பி வேலுமணியின் ஸ்கெட்ச் தான் காரணம் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால், இது கோவை பொறுப்பாளரான செந்தில் பாலாஜிக்கே தெரியாமல் நடந்தது தான் திமுக தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.
-
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’ -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்!












Click it and Unblock the Notifications