Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: 7+1.. 20 தொகுதிகளை கேட்ட பிரேமலதா! 7க்கு ஓகே சொன்ன ஸ்டாலின்! எந்தெந்த தொகுதியில் யார் யார்? போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் மிகப்பெரும் அரசியல் மாற்றமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கிறது. இந்த நிலையில் திமுக விட தேமுதிக தரப்பில் 20 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், திமுக 7 தொகுதிகளை தர ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 7 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரனம் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. கூடுதலாக ராஜ்யசபா சீட்டு எல்கே சுதீஸுக்கு தரப்படலாம் என்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கும் நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக எந்த கட்சி உடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. ஏற்கனவே பாஜக, அமுமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தேமுதிக ஒரு முறை கூட திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.

விஜயகாந்த் இருந்தபோது 2011 இல் 2016இல் திமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அப்போதைக்கு அது சாத்தியப்படவில்லை. குறிப்பாக 2016 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தேமுதிக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

DMK DMDK Tamil Nadu Assembly Election 2026

திமுக தேமுதிக கூட்டணி

அப்போதைய திமுக தலைவர் ஆன கலைஞர் கருணாநிதி, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை." என சொன்னார். ஆனால் திடீரென விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததோடு எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். அதற்கு பிறகு அதிமுக தேமுதிக கூட்டணி உடைந்தது. 2021ல் ஜெயலலிதா - கலைஞர் இல்லாமல் சட்டமன்றத் தேர்தல் நடந்த போது தேமுதிக டிடிவி தினகரனின் அமுமுகவுடன் சந்தித்து படுதோல்வியை சந்தித்தது.

பிரேமலதா விஜயகாந்த் முடிவு

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வி பலமாக எழுந்தது. தேமுதிக, திமுக, அதிமுக, தவெக என அனைத்து கட்சிகளுடன் கூட்டணி பேசி வந்தது. 10 சீட்டு , ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற கோரிக்கை தான் பிரதானமாக இருந்தது. கூடுதலாக பாஜக கூட்டணிக்கு வந்தால் மத்திய இணை அமைச்சர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளாததால் திமுகவுக்கு தாவியுள்ளது தேமுதிக.

2026 சட்டமன்ற தேர்தல்

திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்திருக்கின்றனர். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டு தரவும் திமுக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கிடையே திமுகவிடம் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக கொடுத்ததாகவும், அதில் ஏழு தொகுதிகளை தர திமுக முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தேமுதிக தொகுதி பங்கீடு

இதற்கிடையே திமுகவிடம் கேட்ட தொகுதிகள் பட்டியலும், போட்டியிட திமுக ஒப்புக்கொண்ட தொகுதிகளின் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி கும்னிடிபூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே வி குப்பம் தனித் தொகுதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தயம், உளுந்தூர்பேட்டை, விருதாச்சலம், கடலூர், ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்டுள்ளது. மேலும் நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோயம்புத்தூர் வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்டுள்ளது. இதில் ரிஷிவந்தயம் அல்லது விருத்தாச்சலம், சிவகாசி அல்லது விருதுநகர், விருகம்பாக்கம் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி, பல்லாவரம், பாப்பிரெட்டிபட்டி, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளை தர திமுக முன் வந்ததாக சொல்லப்படுகிறது.

யார் யார்? போட்டி?

இதில் ரிஷிவந்தியும் அல்லது விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த், சிவகாசி, விருதுநகர் அல்லது சாத்தூரில் விஜய பிரபாகரன், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதி, விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் வெங்கடேசன், பல்லாவரத்தில் அனகை முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டியில் இளங்கோவன், சேலம் தெற்கில் அழகுபுரம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. கூடுதலாக ராஜ்யசபா சீட்டு எல்கே சுதீஸுக்கு தரப்படலாம் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+