Election Exclusive: தோழர்கள் இப்போ கோபமா இருக்காங்க.. அடிமடியிலேயே கைவைத்த அறிவாலயம்! 2026ல் காத்திருக்கும் ட்விஸ்ட்?
சென்னை: தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது அடுத்த கட்டை எட்டியுள்ள்து. திமுகவுடன் நீண்டகால தோழமை உறவை பேணிக் கொண்டு வந்த இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்க, திமுக தலைமை அளித்த ஆஃபர் அதைவிடக் குறைவாக இருப்பதாக கூறப்படுவதாக் கூட்டணியில் அதிருதி குரல்கள் எழத் தொடங்கியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தலா 10 தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கையை இடதுசாரிகள் முன்வைத்துள்ளனர். ஆனால் கூட்டணியின் தற்போதைய சூழல் 2021 நிலைமையைப் போல இல்லாது விரிவடைந்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்
புதிய கூட்டணி கட்சிகள், குறிப்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் போன்ற கட்சிகளின் இணைந்தால் தொகுதிகளை பகிர்வதில் சிக்கலை அதிகரித்துள்ளது. கூட்டணியில் கட்சிகள் அதிகரித்தபோது, ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப்படும் இடங்கள் இயல்பாகவே குறையும் என்பது அரசியல் ஒன்றும் புதியது அல்ல. இந்த அடிப்படையில் தி.மு.க. தரப்பில் இடதுசாரி கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்ற சிக்னல் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி
இந்த ஆஃபர் இடதுசாரி கட்சிகளில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகளையே குறைப்பது அரசியல் ரீதியாக பின்னடைவு என்ற எண்ணம் அவர்களிடையே நிலவுகிறது. அரசியல் செல்வாக்கு மற்றும் கூட்டணி தர்மம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தொகுதி பங்கீடு நடக்க வேண்டும் என்பதே இடதுசாரி வாதமாக உள்ளது. அதே நேரத்தில் கூட்டணியின் மொத்த வெற்றியை முன்னிறுத்தும் வகையில், வெற்றி வாய்ப்பு அதிகமான கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதே தி.மு.கவின் நிலைப்பாடாக இருக்கிறது.
இடதுசாரி கட்சிகள்
இதன் தொடர்ச்சியாக அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் முன்னாள் செயலாளர் இரா.முத்தரசன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் கூட்டணியின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகின்றன.
சிபிஐ சிபிஎம்
இடதுசாரி கட்சிகள் குறைவான தொகுதிகளை ஏற்குமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் இப்போதைக்கு இல்லை. இருப்பினும் தமிழக அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது, கூட்டணி அரசியலில் பல நேரங்களில் சமரசம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணியில் தொடர்வது முக்கியமா, அல்லது அரசியல் மரியாதையை காக்கும் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வதா என்ற இரட்டை சிக்கலில் இடதுசாரிகள் உள்ளனர்.
கூட்டணி அரசியல்
மேலும், தொகுதி எண்ணிக்கையைக் காட்டிலும் போட்டியிடும் தொகுதிகளின் தன்மை முக்கியம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இடங்களைப் பெற முடிந்தால், இடதுசாரிகள் சம்மதிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் தங்கள் பாரம்பரிய தொகுதிகளை இழக்கக் கூடாது என்பதும் அவர்களின் முக்கியக் கவலையாகும். ஆனால், திமுக என்ன முடிவெடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications