ஒத்து போங்க.. இல்ல ஒதுங்கி போங்க! டேக் ஆஃப் ஆகுமா திமுக - காங்கிரஸ் கூட்டணி! இன்று கிளைமேக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றி புதிய பதற்றம் நிலவி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையில், இன்றுக்குள் முக்கிய முடிவு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியே நேரடியாக முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றன. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய திமுக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை கூட்டணியில் நீடிக்கும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Selvaperunthagai DMK

திமுக காங்கிரஸ் கூட்டணி

தொகுதி எண்ணிக்கை குறித்து இரு தரப்பும் வெளிப்படையாக எதையும் கூறாமல் இருந்த நிலையில், 25 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். டெல்லி தலைமையிலிருந்து உடனடி கண்டிப்பு வராததால், இது மேலிடத்தின் அனுமதியுடனேயே நடந்ததா என்ற கேள்வியும் எழுந்தது.

தொகுதி பங்கீடு

கடைசி நேரத்தில் கிரிஷ் சோடங்கரின் பேச்சு சிக்கலை அதிகரித்ததாக கருதப்படுகிறது. இதையடுத்து அவரை சற்று பின்வாங்கச் செய்து, ப.சிதம்பரத்தை நேரடி தூதராக அனுப்பி சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றுவரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் சென்னை அருகே நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை

இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், காங்கிரசின் கிரிஷ் சோடங்கர், கேசி வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டண்யில் விரிசல் இருப்பது அம்பலமானது. இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் முன்னிலையில் இந்த உடன்படிக்கை உறுதி செய்யப்பட்டது.

மாநிலங்களவை சீட்டு

இதன்மூலம் 2005 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட பிறகு, முதல்முறையாக தேமுதிக மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. தங்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பல ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை ஓரம் கட்டி விட்டு சில நாட்களுக்கு முன்பு கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு முதன் முதலாக மாநிலங்களவை எம்பி சீட்டை வழங்கும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டு இருப்பது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ப சிதம்பரம் சந்திப்பு

நேற்றைய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சற்று பேரத்தை குறைத்துக் பேசியதாக கூறப்படுகிறது. 28 + 1 என்ற தொகுதி பங்கீடு பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். அதே சமயம், சிலர் கட்சியை வலுப்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும், தொகுதி எண்ணிக்கை மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு பற்றியும் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல்

டெல்லி தலைமையும் திமுக தலைமையும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், உள்ளூர் தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தி எடுக்கும் முடிவு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது முறிவுக்கு வருமா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்று வெளியாகும் முடிவு, 2026 தேர்தல் அரசியல் களத்தை மாற்றக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+