Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்
சென்னை: மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி.. எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் அடி என்பது போல் தான் இருக்கிறது. சசிகலா மூலம் முக்குலத்தோர் வாக்குகள், ராமதாஸ் மூலம் வன்னியர் வாக்குகள், டாக்டர் கிருஷ்ணசாமி மூலம் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் என பிரிவதால் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முழுவதும் 2026 தேர்தலில் சிக்கல் காத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைந்து இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி என கட்சிகள் இருக்கிறது. இதனால் 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி விடலாம் என நினைத்திருந்தார் எடப்பாடி.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் போட்டு வைத்திருந்த கூட்டணி கணக்குகள் அனைத்தும் தவிடுபொடியானது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்தார் எடப்பாடி. மேலும் விஜயை அவர் மிகவும் எதிர்பார்த்து இருந்தார்.
2026 சட்டசபை தேர்தல்
ஆனால் எதுவுமே கைகூடாமல் போனது. விஜய் தனித்து களமிறங்கும் நிலையில் திமுக எதிர்ப்பு வாக்குகள் ஓரணியில் திரள வாய்ப்பில்லாமல் போனது. ஆட்சியை மாற்றும் சக்தி ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்குகளுக்கு தான் இருக்கிறது. தற்போது விஜயால் அது உடைபடும் சூழல் இருக்கிறது. மேலும் முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், மாணவர்களின் வாக்குகள் விஜய்க்கு செல்வதால் எடப்பாடி நினைத்தது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா
இதுமட்டும் இல்லாமல் சமுதாய ரீதியாக எல்லா சமூகங்களின் எதிர்ப்பும் அதிருப்தியும் எடப்பாடி பழனிச்சாமி மீது திரும்பி இருக்கிறது என்கின்றனர். ஜெயலலிதா மறைந்த போது சசிகலா தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகினார். ஆனால் சிறிது காலங்களில் சசிகலாவை வெளியேற்றிய எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். தற்போது சசிகலா எடப்பாடி பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து தனித்துப் போட்டிருக்கிறார்.
தென் மாவட்டங்கள்
அதிமுக பாஜக போட்டியிடும் தென் மாவட்டங்கள் - வடமாவட்டங்கள்தான் சசிகலாவின் குறியாக இருக்கிறது. அதாவது தன்னை ஓரம் கட்டிய பாஜகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாடம் புகட்டும் வகையில் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகமாக இருக்கும் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து முக்கிய தலைவர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருக்கிறார். இது அதிமுகவுக்கு பாதகமாகவும் திமுகவுக்கு சாதகமாகவும் அமையும்.
வன்னியர்கள்
வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ராமதாஸ் ஆதரவாளர்களை நிற்க வைத்து அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை குறைக்க வேண்டும் என்பதும் சசிகலாவின் திட்டமாக இருக்கிறது. இதற்காகத்தான் ராமராசுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க தன்னுடன் கூட்டணியே பேசவில்லை என கிருஷ்ணசாமியை கோபப்படுத்தியுள்ளார் எடப்பாடி. தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் அதிகமாக இருக்கிறது.
கிருஷ்ணசாமி
தற்போது ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கிருஷ்ணசாமிக்கு என்று தனித்து ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. தற்போது கிருஷ்ணசாமியை எடப்பாடி பகைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரும் தனித்து வேட்பாளர்களை களம் இறக்குகிறார்.
தேவேந்திர குல வேளாளர்கள்
இப்படி முக்குலத்தோர், வன்னியர், தேவேந்திர குல வேளாளர்கள் என அனைத்து சமுதாய ரீதியாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் முக்குலத்தோர் வாக்கு வங்கி கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. இப்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லா பக்கமும் சிக்கல் இருப்பதால், 2026 தேர்தலில் வெற்றி பெற மிக கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே! -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
இந்தியில் தகவல்கள்.. தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு! கடும் எதிர்ப்பு -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி












Click it and Unblock the Notifications