Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: அதிமுக கோட்டையில் ஓட்டைய போடும் ஓபிஎஸ்.. ஸ்டாலின் போட்ட ப்ளான்! ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் அமைச்சரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்து வரும் நிலையில், கட்சித் தாவல்கள் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பொதுவாக தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்தபின் எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் ஆளும் கட்சிக்குச் சேர்வது வழக்கமாக இருந்தாலும், இம்முறை தேர்தல் நெருங்கும் தருணத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் அணியுடன் இணையும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரத்திலிருந்து பலர் திமுக அணிக்கு நகர்ந்து வருவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக அதிமுகவில் மீண்டும் இணையும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், தனித்த அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், இறுதியில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து திமுக உறுப்பினராக இணைந்தார். அவருடன் தொடர்புடைய ஆதரவாளர்களும் ஏற்கெனவே திமுகவில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 O Panneerselvam dmk

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக உட்கட்சிப் பிரச்சனைகள் நீடித்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்ற நிலை உருவானது. இதனால் தனிக் குழுவாக செயல்பட்டாலும் அரசியல் எதிர்காலம் தெளிவாக இல்லாத சூழல் நிலவியது. பல்வேறு கூட்டணித் திட்டங்கள் பேசப்பட்டபோதும், இறுதியில் திமுகவுடன் இணைவதே நடைமுறை தீர்வாக கருதப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றன.

மு.க. ஸ்டாலின்

இதனையடுத்தே திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகளை நிறைவு செய்தார். அவருடன் இணைந்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் நேரடி உறுப்பினராக சேர்ந்ததால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர்களாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

தென் மாவட்டங்கள்

ஓபிஎஸ் கட்சி தாவலின் காரணமாக தென் மாவட்டங்கள் ஏற்பட்டுள்ள தாக்கம் தேர்தல் கணக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்துக்கு இருந்த ஆதரவு வாக்குகள் எவ்வளவு அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படும் அம்சமாக மாறி உள்ளது. அதிமுகவிலிருக்கு அதிருப்தி வாக்காளர்களின் மனநிலையையும் இந்த முடிவு பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

திமுக கூட்டணி

அதே நேரத்தில் திமுக கூட்டணி விரிவடையும் நேரத்தில், ஏற்கெனவே இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் தேமுதிக இணைந்ததும் கூட்டணியை மிகப் பெரிய அளவில் பலப்படுத்தியுள்ளது.

அதிமுக - பாஜக

இநிலையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. பல தொகுதிகளில் வெற்றி-தோல்வி வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு கட்சி மற்றும் சிறிய தலைவர்களின் இணைப்பு கூட தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து இருப்பது தமிழக முழுவதும் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தாது என்றாலும், தேனி மாவட்டத்திலாவது சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

தென் மாவட்டங்கள்

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் திமுகவில் ஏற்கனவே இணைந்ததும், சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது. எப்படியாவது எடப்பாடியுடன் சேர்ந்து விடலாம் என நினைத்த ஓபிஎஸ் எதுவுமே கை கொடுக்காததால் இறுதியில் திமுகவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். நிச்சயம் இது அதிமுகவின் வாக்கு வங்கியில் சிறிய விரிசலையாவது ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+