Election Exclusive: அய்யாவுக்கு கெட்-அவுட்.. அன்புமணிக்கு கட்-அவுட்! மகனால் மனமுடைந்த ராமதாஸ்! அடிவருடிகள் கொடுத்த ஐடியா
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக அன்புமணி ராமதாஸின் கைகளுக்கு வந்திருக்கும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டார். இந்த நிலையில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கைவிட்ட நிலையில் "அய்யா பாமக" என்ற புதிய கட்சியை தனது ஆதரவாளர்கள் மூலம் ராமதாஸ் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நம்முடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை, எனவே அன்புமணி போட்டியிடும் தொகுதிகளில் அய்யா பாமக வேட்பாளர்களை போட்டியாக நிறுத்தலாம் என ராமதாஸின் ஆதரவாளர்கள் ஐடியா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டாலும் எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என ராமதாஸ் யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் பல திருப்பங்களை பார்த்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று குடும்பப் பிளவால் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக வெடித்த பிறகு, "கட்சி யாருக்கு? சின்னம் யாருக்கு?" என்பது வரை சென்றது.
தற்போது உள்ள சூழலில், பாமக முழுமையாக அன்புமணியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தற்போதைய ஆவணங்கள் மற்றும் நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாமக பிளவு
இதன் மூலம் அன்புமணி தரப்புக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையமும் பாமக மற்றும் அதன் 'மாம்பழம்' சின்னம் அன்புமணி தரப்புக்கே செல்லும் வகையில் முடிவு எடுக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணியின் அரசியல் நிலை வலுவடைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், "பழுத்த மரத்துக்கே கல்லடி" என்ற பழமொழி போல, தந்தையிடம் இருந்து கட்சி மகனிடம் சென்றிருப்பது ராமதாஸ் தரப்பை விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அய்யா பாட்டாளி மக்கள் கட்சி
இதன் தொடர்ச்சியாக, 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சியை, பாமக தலைமை நிலைய செயலாளராக இருந்த அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் தொடங்கியுள்ளனர். பாமக கொடியை ஒத்த வடிவில், ராமதாஸின் உருவப் படம் பதிக்கப்பட்ட புதிய கொடியும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம்
இதன் பின்னணியில் ராமதாஸ் உள்ளாரா என்ற கேள்விக்கு அவரது தரப்பு வெளிப்படையாக பதிலளிக்காமல் இருந்தாலும், அன்புமணி தரப்பினர் இது விரக்தியில் எடுக்கப்பட்ட அடுத்த கட்ட நடவடிக்கை என விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த புதிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகாரம் வழங்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆவணங்களில் குறைபாடு உள்ளதாக தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாம்பழம் சின்னம்
பாமக வரலாற்றைப் பார்க்கும்போது, 1989-ல் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர் பல மாற்றங்களுக்குப் பிறகு 1998 முதல் மாம்பழம் சின்னத்தில் தொடர்ந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிளவு அந்த சின்னத்திற்கே பாதிப்பு ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போதைய சூழலில் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்பிலேயே நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ராமதாஸ் தரப்பு
இதனால், ராமதாஸ் தரப்பு புதிய சின்னத்துடன் அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரதல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியை பதிவு செய்யுமா? பதிவு செய்தாலும் ஒரே சின்னத்தை ஒதுக்குமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஜிகே மணி உள்ளிட்ட ஆதரவாளர்கள் ராமதாஸிடம் பேசியதாக சொல்லப்படுகிறது.
திமுக அதிமுக
அதே நேரத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தன்னை தேடி வந்த காலம் போய் தன்னை புறக்கணித்த காலமும் வந்துவிட்டது. தற்போது தேர்தலில் போட்டியிட்டும் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தனது அரசியல் வாழ்வு முழுமையான அஸ்தமனத்தை சந்தித்து விடும் என்பதால் யோசித்து முடிவெடுக்கலாம் என சொன்னாராம் ராமதாஸ் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான்












Click it and Unblock the Notifications