Election Exclusive: சொப்பனத்திலும் கண்டில்லா சாரே..கரும்பு விவசாயி Vs ஏர் கலப்பை விவசாயி! சீமானுக்கு இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நகர்வுகள் வேகமெடுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சீமானின் கரும்பு விவசாயி சின்னத்துக்கு புதிய சிக்கல் உருவாக்கியுள்ளது. மத்திய பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, வரவிருக்கும் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் புளியை கரைத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவும் என்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் சீமான் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.
கடந்த பல தேர்தல்களை தனித்தே சந்தித்த சீமான் இந்த முறையும் தனித்து தான் போட்டி என அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பல தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சி
காரைக்குடி தொகுதியில் சீமானும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் விவசாயி, மைக் உள்ளிட்ட சின்னங்களை பயன்படுத்தி வந்தார் சீமான். கரும்பு விவசாயி சின்னத்துக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்றதால் அவருக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட்டது. சீமானின் முக வடிவமைப்பில் இருக்கும் விவசாயி ஏர் கலப்பையோடு இருப்பது போல சின்னத்தை வரைந்து கொடுத்து அங்கீகாரத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி.
ஏர் கலப்பை விவசாயி
இதை அடுத்து வரும் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறலாம் என சீமான் திட்டமிட்டு இருந்தார். தற்போது அதில் தான் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராருமான ராம்தாஸ் அத்வாலே, தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வாய்ப்புகள் குறித்து பேசியபோது, தங்கள் கட்சிக்கு உரிய தொகுதிகள் வழங்கப்படாவிட்டால் தனித்து களம் இறங்குவோம் என தெரிவித்தார்.
கரும்பு விவசாயி சின்னம்
மேலும், 51 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசியலில் சின்னங்கள் முக்கியமான அடையாளங்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியுடன் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், அந்தக் கட்சியின் அடையாளமாகவே பொதுமக்கள் மனதில் பதிந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அந்த சின்னத்தை பயன்படுத்த முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி 'மைக்' சின்னத்தில் போட்டியிட்டு மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது.
இந்திய குடியரசு கட்சி
பின்னர் 'ஏர் கலப்பையோடு இருக்கும் விவசாயி' சின்னத்தில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரும்பு விவசாயி சின்னம் இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அந்த சின்னத்தில் தேர்தலில் களம் இறங்குவோம் என்ற அத்வாலேவின் அறிவிப்பு நாம் தமிழர் கட்சியினர கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மாதிரியான சின்னம் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. அதனால் நாம் தமிழர் கட்சியினரின் வாக்கு சிதறலுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இளைஞர் வாக்குகள்
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியான இளைஞர்கள் வாக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் வரவால் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஏர்கலப்பை உடன் இருக்கும் விவசாயி சின்னத்திற்கும் இந்திய குடியரசு கட்சியின் கரும்பு விவசாயிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு இந்த விவகாரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
சின்னம் குழப்பம்
சில தொகுதிகளில் பிரச்சனை இருக்காது என்றாலும் 51 தொகுதிகளில் குடியரசு கட்சி போட்டியிடும் நிலையில் அங்கு நிற்கும் வேட்பாளர்கள் இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்பார்கள். இதனால் அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். இந்த நிலையில் ராமதாஸ் அட்வாலேக்கு நெருக்கமான நபர்களிடம் சீமான் பேசி வருவதாகவும் தமிழக தேர்தலில் அவர் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இருதரப்பும் அதனை உறுதி செய்யவில்லை.
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர்












Click it and Unblock the Notifications