குடும்பமா? அரசியலா? 4 மணிக்கு மகளின் நிச்சயதார்த்தம்..காரிலேயே பரபரப்பாய் சுற்றிய செல்வப் பெருந்தகை!
சென்னை: தமிழக அரசியலில் தற்போதைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது தான். கிட்டத்தட்ட கூட்டணி முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் கூட்டணியை எப்படியாவது தொடர வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப் பெருந்தகை. அவரது மகளின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நான்கு மணிக்கு நடைபெறுவதாக பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுத்த நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்காக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்குமாக அலைந்து வருகிறார் செல்வப் பெருந்தகை.
வழக்கம்போல கடைசி கட்டத்தில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து நீடித்து வரும் இழுபறி இன்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குடும்ப சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபுறம் தனது மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் என இரு முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் நேரிட்டதால், அவர் கடுமையான அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் இன்று மாலை 4 மணிக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய கடைசி நாள் என்பதால் அரசியல் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தரப்பில் மார்ச் 3 ஆம் தேதிக்குள் இறுதி முடிவு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை முதலே மிகத் தீவிரமாக பேச்சு நடத்தி வந்தார் செல்வப் பெருந்தகை.
செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம்
2026ல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை உடன் இணைந்து ஆலோசனை நடத்தினர். காலை சுமார் 11.40 மணியளவில் சிதம்பரத்தின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. திமுகவுடன் தொடர வேண்டுமா, அல்லது வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டுமா என்பது குறித்து விரிவான பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க நேரம் பெறப்பட்டிருந்தது.
மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு
சுமார் 12.25 மணியளவில் சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் அங்கிருந்து கிளம்பி சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தை 12.40 மணிக்கு அடைந்தனர். இருவரும் முதல்வருடன் அரைமணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். திமுக தரப்பில் 27 முதல் 28 தொகுதிகள் வரை வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் காங்கிரஸ் டெல்லி தலைமை 39 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது என கூறப்படுகிறது. இந்த வித்தியாசமே கூட்டணி முடிவை தாமதப்படுத்தி வருகிறது. திமுக விதித்த கெடு இருந்தபோதிலும், காங்கிரஸ் தரப்பில் இன்னும் இறுதி நிலைப்பாடு எடுக்கப்படவில்லை.
ப.சிதம்பரம்
காங்கிரஸின் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பு திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த அணியில் செல்வப்பெருந்தகையும் ப.சிதம்பரமும் முக்கியமாக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தரப்பு, அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும் என்ற மனநிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசியல் சூழ்நிலையிலேயே செல்வப்பெருந்தகையின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
ப சிதம்பரம் ஆலோசனை
இன்று மாலை 4 மணிக்கு மகளின் நிச்சயதார்த்தம் தொடங்கவிருந்த நிலையில், அதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தபோதும் செல்வப் பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இன்றுக்குள் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை எட்ட வேண்டும் என்ற அவசரத்தால் அவர் அங்குமிங்கும் சென்று ஆலோசனையில் பங்கேற்றார். கூட்டணி ஒரு முடிவை நோக்கி நகர்ந்துள்ளது என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் இறுதி முடிவு இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பேச்சுவார்த்தைகளுகிடையே செல்வப் பெருந்தகை கடைசி நேரத்தில் தான் மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
-
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications