நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை வெளிப்படையாக அதிக எதிர்பார்ப்புகளை முன்வைக்காமல் இருந்த திருமாவளவன் திடீரென இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கேட்கும் முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடையும் சூழலில் இந்த டிமாண்ட் முன்வைக்கப்பட்டிருப்பது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஐயூஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட சிறிய கட்சிகளும் திமுக தலைமையால் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓரளவு சிக்கலின்றி பகுதி பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
திமுக கூட்டணி
இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளும் சில நாட்கள் இழுபறியாக நீடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் மூன்று கட்டமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் 4 கட்டமாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இந்த இரண்டு கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. ஆனால் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
திமுக விசிக
இந்த சூழ்நிலையில், விசிக உடனான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இதுவரை திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விசிக ஒரே ஒரு முறை மட்டுமே அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விசிக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் திமுக தரப்பில் 6 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என முன்மொழிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழு கூட்டத்தை திடீரென கூட்டிய திருமாவளவன், அந்த கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். அந்த தீர்மானங்களில் பல்வேறு அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும், எட்டாவது தீர்மானமே தற்போது அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. அந்த தீர்மானத்தில், 2019 முதல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று பல்வேறு தேர்தல்களில் கூட்டணியின் வெற்றிக்கு விசிக முக்கிய பங்களிப்பு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்யசபா சீட் கோரிக்கை
இதன் அடிப்படையில், கட்சியின் வலிமைக்கேற்ப வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் விசிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தையும் கேட்டுப் பெற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வரை திமுக கூட்டணியில் பல முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
திருமாவளவன்
இந்தச் சூழலில், இதுவரை அமைதியாக இருந்து வந்த திருமாவளவன் திடீரென இரட்டை இலக்க கோரிக்கையை முன்வைத்திருப்பது அரசியல் கணக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களில் விசிக பெற்ற வாக்கு விகிதம், குறிப்பிட்ட சமூகங்களில் அந்தக் கட்சிக்கு இருக்கும் தாக்கம் மற்றும் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருவது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த முறை அதிக இடங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
தொகுதி பங்கீடு இழுபறி
மேலும், 2028 மாநிலங்களவைத் தேர்தலை மனதில் வைத்து இப்போதே ராஜ்யசபா இடம் குறித்த கோரிக்கையை முன்வைத்திருப்பது, நீண்ட கால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், விசிகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வழங்க வேண்டுமெனில், மற்ற கூட்டணி கட்சிகளின் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலையும் உருவாகலாம்.
இரட்டை இலக்க தொகுதி
இதனால் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளில் திமுக தலைமைக்கு சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடையும் தருவாயில் திருமாவளவன் எடுத்துள்ள இந்த திடீர் நகர்வு கூட்டணிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் விசிகக்கு இரட்டை இலக்க தொகுதிகளும் ராஜ்யசபா உறுதியும் கிடைக்குமா அல்லது வழக்கம்போல சமரச முடிவுதான் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! -
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சென்னையில் களம் காணும் 419 வேட்பாளர்கள்! அதிகபட்ச எண்ணிக்கையில் விஜய்யின் பெரம்பூர்தான் டாப்! -
தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?











Click it and Unblock the Notifications