Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் தொகுதிகள் மற்றும் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டுமென வேல்முருகனிடம் திமுக மூத்த அமைச்சர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக கூட்டணியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கொண்ட குழு ஈடுபட்டு வருகிறது.

2026 தமிழக தேர்தல்
மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனித்துப் போட்டியிடுவோம் என்ற நிலைப்பாட்டில் களத்தில் இறங்கி இருக்கிறார். இவ்வாறு அனைத்து கட்சிகளும் தேர்தல் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டணி அரசியலும் வேகமெடுத்துள்ளது.
திமுக கூட்டணி
திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இதற்கு மேலாக புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீடு சிக்கலான நிலையை எட்டியுள்ளது. திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் போதுமான அளவு இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
இதனால் சில கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகக்கூடும் என்ற அரசியல் பேசுபொருளும் எழுந்துள்ளது.
தவாக வேல்முருகன்
அவர் வெளியேறினால் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் சிலர் கணிக்கின்றனர். இதுகுறித்து தி.வேல்முருகன் கூறுகையில், "திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் மட்டுமல்ல, எங்கள் அரசியல் கோரிக்கைகளும் முக்கியமானவை. அந்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் கூட்டணியில் தொடர்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்போம். சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த தெளிவும் கிடைக்கவில்லை" என்றார்.
தொகுதி பங்கீடு
மேலும் அவர் கூறுகையில், "கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லை என்றால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கிறதா என்பதை பார்த்து அதற்கேற்ப இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணி சிக்கல்
இந்நிலையில் வேல்முருகன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று திமுகவின் மூத்த அமைச்சர்கள் அவரிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் தொடருமா இல்லையா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications