Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாலோ யாராவது இருக்கீங்களா? 2026ல் தன்னந்தனியாக தவிக்கும் விஜய்! ஒரு லெட்டர்பேடு கட்சி கூட வரலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்கும் சூழல் உருவாகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

காங்கிரஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ் என விஜய்யுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கருதப்பட்டவர்கள் எதிர் முகாம்களில் தஞ்சம் புகுந்த நிலையில், என்னவென்று செய்வது எனத் தெரியாத நிலையில் விஜய் உள்ளதாகச் சொல்கின்றனர்.

தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் தேர்தலை எதிர்கொள்ள உறுதியான கட்டமைப்புடன் தயாராகி வருகின்றன. ஆனால் இது தான் விஜய் தலைமையிலான தவெகவுக்கு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

2026 சட்டசபை தேர்தல்

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ந்து இணைந்தே தேர்தல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து இந்த கூட்டணி கட்டமைப்புடன் உள்ளது வருகிறது. மேலும், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால் திமுக கூட்டணி 2026 தேர்தலை பெரிய அளவிலான கூட்டணிப் பலத்துடன் சந்திக்க தயாராக இருக்கிறது.

தேர்தல் கூட்டணி

மறுபக்கம், அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக வாக்குகள் சிதறிய அனுபவம் உள்ளது. அதன் பின்னர் ஒன்றிணைந்தால் மட்டுமே அரசியல் பலம் அதிகரிக்கும் என்ற புரிதலுடன் அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. பாஜக உடன் மீண்டும் இணைந்துள்ள நிலைய்டில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதேபோல், அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் இணைந்து விட்ட நிலையில், மேலும் சிலர் வரவுள்ளனர்.

தவெக விஜய்

இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இதுவரை எந்த பெரிய அரசியல் கட்சியும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சிறு மற்றும் நடுத்தர அரசியல் தலைவர்கள் மற்ற அணிகளின் பக்கம் சாயும் நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், புதிய அரசியல் சக்தியாக உருவாக முயற்சிக்கும் இந்த கட்சிக்கு கூட்டணி அமைப்பது சவாலாக மாறியுள்ளது. விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் வாய்ப்பு உள்ளிட்ட அழைப்புகளை முன்வைத்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அந்த அழைப்புக்கு பெரிய அரசியல் கட்சிகள் நேரடி பதில் அளிக்கவில்லை. இதனால், 2026 தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை தொடர்ந்துள்ளது. இதனுடன் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆகியவை உறுதியான அணிகளாக களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அமைப்பில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தவெக தனித்து போட்டி

விஜய்க்கு பெரிய அளவில் ரசிகர் ஆதரவு இருப்பது பொதுக் கூட்டங்களில் காணப்பட்டாலும், அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆதரவு இல்லாத நிலை தேர்தல் கணக்கில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால் 2026 தேர்தலில் அவர் எவ்வாறு களமிறங்குவார், கூட்டணி மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே விஜய் காங்கிரஸ் கூட்டணி, டிடிவி தினகரன் விஜய் கூட்டணி, ஓபிஎஸ் விஜய் கூட்டணி, சசிகலா விஜய் கூட்டணி என தொடர்ந்து பல கூட்டணி வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரை சிறிய கட்சிகள் கூட விஜய் உடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை, 2026 தேர்தலில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாகவே சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+