அடிச்சு ஆடப் போறாரு விஜய்.. சுடச்சுட ரெடியான தேர்தல் அறிக்கை! வாக்குறுதிகள் என்ன? எப்போ ரிலீஸ்?
சென்னை: தமிழக அரசியல் சூழல் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தேர்தல் அறிக்கை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் வரும் 27ஆம் தேதி முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிடலாமென சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் பிரதான கட்சிகள் நான்கு முனைகளில் நின்று 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கின்றன. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் பெரும் கூட்டணி ஒன்று தேர்தல் களத்துக்கு தயாராக இருக்கிறது.
அதனுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநில கட்சிகளான மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் துணை நிற்கின்றன. இதனால் திமுக மிக வலுவாக உள்ளது என்றே சொல்லலாம்.

தமிழக வெற்றிக் கழகம்
மறுபுறம் தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுகவில் தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சிகளான பாமக, ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அந்த கட்சி நிச்சயம் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கும். மறுபுறம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என உறுதியாக சொல்லி இருக்கிறார். இதில் நான்காவதாக எண்ட்ரி கொடுத்தவர் தான் விஜய்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் குதித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என கூறி விஜய் பல தேர்தல்களைக் கண்டு கொள்ளவில்லை. இதுவே விஜய் மீதான விமர்சனமாகவும் முன் வைக்கப்பட்டது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என இரண்டரை கோடி வாக்குகளை குறி வைத்து தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்கின்றனர் அந்த கட்சியினர். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கைகளும் அந்த கட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
விஜய்
இதனால் தொண்டர்கள் கடும் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான அரசியல் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுதான் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு படி மேலே சென்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். மகளிர்க்கு மாதம் 2000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிடப்பட்டு இருக்கிறது.
விஜய் தேர்தல் அறிக்கை
இந்த நிலையில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் விஜய் பெரிதும் நம்பி இருப்பது தேர்தல் அறிக்கையைத்தான். இதை அடுத்து முக்கிய நிர்வாகிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவை தமிழக வெற்றி கழகம் அமைத்தது. இந்த குழு தமிழக முழுவதும் சென்று தொழில்துறையினர் பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்டு வருகிறது. இந்த குழுவுக்கு ஆதரவும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு இணையதளமும் தொடங்கப்பட்டு பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இதற்போது தேர்தல் அறிக்கை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் தேர்தல் அறிக்கை பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் வரும் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களை சந்திப்பது விஜய்யின் வழக்கம் இல்லை என்பதால் பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அங்கு வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து வேலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கல்வி மருத்துவம் வேலை
எனவே அந்த கூட்டத்தில் கூட தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. திமுக அதிமுகவை போல வெறும் இலவச திட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் அதில் இருக்கும் எனவும், மக்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கவரும் வகையில் இலவசங்கள் இல்லாத மாற்றுத் திட்டங்கள் அதில் இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
-
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
மனோஜ் பாண்டியன் vs அப்பாவு.. ராதாபுரம் தொகுதியில் களமிறங்கும் பனங்காட்டுப்படை.. சைலண்டான ஹரி நாடார்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது












Click it and Unblock the Notifications