Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம்
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும் சூழல் உருவாகி வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த கூட்டணியில் இணையப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், தவெக பாஜகவை நோக்கி நகர்வதற்கான சிக்னல்கள் அதிகமாகத் தென்படத் தொடங்கி இருப்பதாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தங்களை நோக்கி வரலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் தரப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிவை ஏற்படுத்தி, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையும் பாஜக நன்கு உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தவெக தலைவர் விஜயைச் சுற்றி அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுவது, ஜனநாயகன் திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள், மேலும் குடும்ப விவகாரங்கள் ஆகியவை விஜய்க்கு கூடுதல் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தவெக கூட்டணி
இதே நேரத்தில், தவெக தனித்துப் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து இறுதியில் திமுகா தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக மாறக்கூடும் என்ற அரசியல் கணக்கை பாஜக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தவெகவை தங்களது அணிக்கு இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாஜக தவெக கூட்டணி
ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே திரைமறைவில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அவை உடன்பாடின்றி முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இறுதி முயற்சியாக பாஜக தரப்பு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், "பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?" என்ற யோசனை விஜய் தரப்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன.
புஸ்ஸி ஆனந்த்
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு கட்சியின் பலத்தை நிரூபிப்பதா அல்லது தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கூட்டணி
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஏற்கெனவே அந்தக் கட்சியை "கொள்கை எதிரி" எனக் குறிப்பிட்ட நிலையில் பொதுமக்களிடம் என்ன விளக்கம் வழங்குவது என்ற கேள்வியும் கூட்டத்தில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி விவகாரம் கட்சிக்குள் பெரிய விவாதமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் எடுக்கும் முடிவு
அதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்ற சில மாவட்டச் செயலாளர்கள், "புதிய கட்சி என்பதால் தற்போதைய சூழலில் தலைவருக்கும் கட்சிக்கும் தேவையற்ற நெருக்கடிகள் உருவாகாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பாதுகாப்பான முடிவாக இருக்கலாம்" என்ற கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இறுதியில் விஜய் எடுக்கும் எந்த முடிவையும் கட்சியினர் ஏற்றுக்கொள்வோம் என்று மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசியமாகச் சந்திப்பு
இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைக்கு ஒரு நாள் முன்பாகவே டெல்லி சென்று ஹோட்டலில் தங்கியிருக்கும் விஜய், அங்கு பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அப்படியான சந்திப்பு நடந்தால், தவெக பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் நடிகர் விஜய் எடுக்கும் அடுத்த அரசியல் முடிவு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!















Click it and Unblock the Notifications