சென்னையில் 400 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.. பரபர தகவல்
சென்னை: சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ தங்ககட்டிகள் சிக்கி உள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்களை வினியோகம் செய்வததை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புள்ள புதிய பொருட்களை எடுத்து சென்றால் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினால் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று சென்னை குன்றத்தூரில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அப்போது 2 மினிலாரி வந்தது. மினிலாரிகளை தடுத்து பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
கோடி கோடியாக சிக்கிய பணம்.. சென்னையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
அப்போது மினிலாரியின் உள்ளே 400 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் டிரைவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து 400 கிலோ தங்க கட்டிகளோடு, 2 மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாகன சோதனையில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் மீட்பது எப்படி? ரொம்ப முக்கியம்
மேலும் சம்பவம் தொடர்பான வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த தங்கக்கட்டிகள் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் சென்னை கொண்டு வந்ததும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மினிலாரியில் மண்ணூரில் உள்ள குடோனுக்கு எடுத்து சென்றபோது பறக்கும் படையிடம் சிக்கியதும் தெரியவந்தது.
ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? தேர்தல் நடத்தை விதியால் கட்டுப்பாடு! உஷார் மக்களே
அதாவது தனியார் நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பல்வேறு நகைக்கடைகளுக்கு தங்கக்கட்டிகளை சப்ளை செய்து வருகிறது. இவர்கள் வெளிநாட்டில் இருந்து தங்க கட்டிகள் வாங்கிய நிலையில் குடோனுக்கு எடுத்து சென்றபோது வாகனம் சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 400 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மினிலாரி டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications