வாகன சோதனையில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் மீட்பது எப்படி? ரொம்ப முக்கியம்
சென்னை: லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால் அதனை மீட்பது எப்படி? என்பது பற்றிய விபரம் வருமாறு:
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் என்பது அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி நடைபெற உள்ளது. 7 வது கட்ட தேர்தல் ஜுன் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஏப்ரல் 19 ம் தேதியே ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் பறக்கும் படைகள் மூலம் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதியை பொறுத்தமட்டில் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணத்தை எடுத்து செல்லும்போது கண்டிப்பாக ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல வியாபாரிகள், வணிகர்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பொதுவாக தேர்தல் சமயங்களில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ஆவணங்கள் இன்றி எடுத்து செல்வதை பறிமுதல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணம் மாவட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். இந்த பணத்தை ஒருவாரத்துக்குள் மீண்டும் திரும்ப பெற்று கொள்ளலாம். அதற்கு உரிய ஆவணங்களை கருவூலத்தில் கொடுத்தால் போதுமானது.
ஒருவேளை நீங்கள் பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் அந்த பணம் கருவூலத்தில் தனியே சீல் வைத்து வைக்கப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்படும். அதிலும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் ஆவணங்களின்றி சிக்கினால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தாலும் வரி கட்ட வேண்டி இருக்கும்.
சில இடங்களில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணம் ஆவணங்களின்றி எடுத்து சென்றாலே வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கும் வழக்கமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்வரை உரிய ஆவணங்களோடு பணத்தை எடுத்து செல்வது தான் சிறந்ததாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications