Bangalore: ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை.. தட்டிக்கேட்ட பெற்றோர், தங்கையை கொன்ற ஸ்வேதா.. புதுவையில் கைது
பெங்களூர்: பெங்களூரில் காதலனுடன் லிவ் இன் உறவில் இருந்த மகளை ஏன் என்று கேட்ட பெற்றோர் மற்றும் சகோதரி என 3 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஸ்வேதா, பெற்ற தாய் தந்தை என்றும் பாராமல் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தலைமறைவான ஸ்வேதாவை போலீசார் தேடிவந்த சிலையில் புதுவையில் அவர் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 52). கம்யூட்டர் என்ஜினீயரான இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு ஸ்வேதா (24) மற்றும் சுப்ரியா (19) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஸ்வேதாவும் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ளார். ஸ்வேதா சீகேஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஆண் நண்பருடன் லிவ் இன் உறவு
கடந்த இரு மாதங்களாக மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று கூறி, அவரை பார்க்க பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஸ்வேதா தனது ஆண் நண்பர் கென்னத் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்ததது தெரியவந்தது. இதை பார்த்து சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்து மகள் ஸ்வேதாவை கண்டித்துள்ளனர்.
3 பேரையும் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பெற்றோர் என்றும் பாராமல், ஸ்வேதா தனது காதலனுடன் சேர்ந்து சோமசுந்தரம், முத்துலட்சுமி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அதுபோல் தடுக்க வந்த சுப்ரியாவையும் குத்தியுள்ளார். இதில் சுப்ரியாவும், முத்துலட்சுமியும் துடிதுடித்து உயிரிழந்தனர். சோமசுந்தரம் அவர்களிடம் இருந்து தப்பித்து பலத்த காயங்களுடன் வெளியே வந்து உயிருக்கு போராடினார்.

இதற்கிடையே, தனது காதலன் கென்னத்துடன் ஸ்வேதா தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் சோமசுந்தரந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பெற்ற மகளே தாய் தந்தை மற்றும் சகோதரியையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்தது. தலைமறைவு ஆன ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரையும் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
பிரியாணி கடை அருகே நின்ற ஸ்வேதா
முதற்கட்ட விசாரணையில், ஸ்வேதா திருமணம் செய்யாமல் காதலன் கென்னத்துடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. கென்னத்தும் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். மகள் திருமணம் செய்யாமல் காதலனுடன் வாழ்வதை அறிந்து அங்கு இளைய மகளுடன் வந்த பெற்றோர் ஸ்வேதாவை கண்டித்ததாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர், தனது காதலனுடன் சேர்ந்து பெற்றோர், தங்கையை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஸ்வேதா மற்றும் கென்னத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், புதுவையில் ஸ்வேதா சிக்கியுள்ளார். புதுவையில் பிரியாணி கடை அருகே நின்று கொண்டு இருந்த ஸ்வேதாவை போலீசார் விசாரித்தனர். இதில், கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டார். தகவல் அறிந்து புதுவை வந்த பெங்களூர் கே.எஸ்புரம் போலீசார் ஸ்வெதாவை கைது செய்து அழைத்து சென்றனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன் கென்னத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.















Click it and Unblock the Notifications