என் வேலை போனால் 30 வருசம் வீட்டுக்கடன் இஎம்ஐ எப்படி கட்டுவேன்.. பெங்களூர் ஐடி ஊழியர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முதலில் வீடு வாங்கலாம்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் கொஞ்ச நாளா நடக்குற Layoff-ஐ பார்க்கும்போது அந்த ஆசையே போச்சு.. பேசாம சொந்த ஊர்ல கம்மி ரேட்ல ஒரு சொத்த வாங்கி போட்டுட்டு, வாடகை வீட்டுலயே இருந்துடலாம்னு தோணுது. ஒருவேளை நாளைக்கே என் வேலை போனா 30 வருசம் எப்படி EMI கட்டுவேன்னு நினைச்சாலே பயமா இருக்கு? இதே மாதிரி மைண்ட்செட்ல யாராச்சும் இருக்கீங்களா? நீங்க இந்த சிச்சுவேசன எப்படி சமாளிக்கிறீங்க?'' என்று- பெங்களூரில் வசிக்கும் ஐடி ஊழியர் ஒருவர் ரெட்டிட் தளத்தில் புலம்பி உள்ளார். அவருக்கு பலரும் பதில் அளித்துள்ளனர். அதேபோல் ட்விட்டரிலும் பல நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர். அதனை இந்த பதிவில் பார்ப்போம்,

உலகெங்கும் நடக்கும் பணிநீக்கம் காரணமாக ஐடி வேலைகள் நிலையற்றதாக மாறியுள்ளன. 30 ஆண்டுகள் வரை நீண்ட கால இஎம்ஐ கட்ட வேண்டிய சூழலில், வேலை போனால் கடனை எப்படி அடைப்பது என்ற அச்சமே இந்தத் தவிப்புக்குக் காரணம். இதனால் வாடகை வீட்டிலேயே தங்கி, சொந்த ஊரில் குறைந்த விலையில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது எனப் பல ஐடி ஊழியர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை நிரூபிக்கும் விதமாக சென்னை, பெங்களுரில் வேலை செய்யும் பலர் புலம்புவதை காண முடிகிறது.

If I lose my job how will I pay the home loan EMI for 30 years Bangalore IT employee s concern


எப்படி சமாளிக்கிறீங்க

அப்படித்தான் பெங்களூரில் ஐடி வேலை செய்யும் ஒருவர் ரெட்டிட் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல் வீடு வாங்கலாம்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் கொஞ்ச நாளா நடக்குற Layoff-ஐ பார்க்கும்போது அந்த ஆசையே போச்சு.. பேசாம சொந்த ஊர்ல கம்மி ரேட்ல ஒரு சொத்த வாங்கி போட்டுட்டு, வாடகை வீட்டுலயே இருந்துடலாம்னு தோனுது. ஒருவேளை நாளைக்கே என் வேலை போனா 30 வருசம் எப்படி EMI கட்டுவேன்னு நினைச்சாலே பயமா இருக்கு? இதே மாதிரி மைண்ட்செட்ல யாராச்சும் இருக்கீங்களா? நீங்க இந்த சிச்சுவேசன எப்படி சமாளிக்கிறீங்க?" என்று கேட்டுள்ளார்.

ஏன் இந்த பயம்

இன்றைய சூழலில் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஒரு நடுத்தரமான அப்பார்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்றாலும் ₹80 லட்சம் முதல் ₹1.5 கோடி வரை செலவாகிறது. இதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால வீட்டுக் கடனை ) ஊழியர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாதம் ₹60,000 முதல் ₹1,00000 வரை இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கும். ஒரு ஊழியருக்கு வேலை இருக்கும் வரை இது சுமையாகத் தெரிவதில்லை. ஆனால், "நாளைக்கே வேலை போனால் என்ன செய்வது?" என்ற கேள்வி வரும்போதுதான் 30 வருடக் கடன் ஒரு பெரும் நரக வேதனையாக மாறிவிடுகிறது.

ஐடி வேலை எப்போது வேண்டுமானாலும் போய்விடுமா?

ஆமாம், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், ஐடி நிறுவனங்களின் லாப நோக்கம் மாறியுள்ளது. திறமை இருந்தும் நிறுவனங்களின் செலவினக் குறைப்பிற்காக ( ஊழியர்கள் திடீரென நீக்கப்படுகிறார்கள். இதனால் ஐடி துறை என்பது "அதிக சம்பளம் - அதிக ஆபத்து" கொண்ட துறையாக மாறிவிட்டது.

மாற்றுச் சிந்தனை என்ன?

இந்த பயத்தின் விளைவாகவே, இப்போதைய தலைமுறையினர் ஒரு புதிய பொருளாதார உத்தியைக் கையாள்கிறார்கள். பெருநகரங்களில் வாடகை வீட்டிலேயே தங்கிவிட்டு, அந்த வாடகைக்கு இணையான தொகையைச் சேமித்து, தங்கள் சொந்த ஊர்களில் குறைந்த விலையில் நிலமாகவோ அல்லது சிறிய வீடாகவோ வாங்கி முதலீடு செய்கிறார்கள். இது வேலை இழந்தாலும் இவர்களைக் கடன் சுமையில் தள்ளாது என்று நம்புகிறார்கள். ஆனால் பெங்களூர்,சென்னையில் வசித்தவர்கள், சொந்த ஊரில் போய் அதே லைப் ஸ்டைலை வாழ முடியாததால், தடுமாறுகிறார்கள். பலர் ஏமாற்றம் அடைகிறார்கள். நன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென தலைகீழாக விழுந்தால் எப்படி இருக்கும்.. அப்படியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் உடனடியாக வீடு வாங்குவதைத் தவிர்த்து, குறைந்தபட்சம் 6 மாதத்திற்கான இஎம்ஐ மற்றும் குடும்பச் செலவிற்கான தொகையை "அவசரகால நிதியாக சேர்த்து வைத்த பிறகே, பெரிய கடன்களுக்குள் கால் வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், வேலை நிரந்தரமல்ல, உங்கள் திறமை நிரந்தரம், அது யாருக்காவது உபயோகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளனும்..
சேமிப்பு முழுவதும் வழித்தெடுத்து வீடு வாங்க கூடாது.. குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான EMI + குடும்ப செலவுக்கான பணம் பாலன்சில் எப்போதும் இருக்கனும் .. அப்போதான் வீடு வாங்க யோசிக்கனும்" இவ்வாறு கூறியுள்ளார்.

நம்பிக்கை வேண்டும்

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், 1998 நான் IT கம்பெனி வேலைக்கு சென்ற போது சொன்ன சொல் Layoff இன்று வரை ஒரு ஹேர் நடக்கவில்லை. கவலை வேண்டாம் நிறைய வேலை இருக்கிறது. இன்று சொந்த தொழில் கடவுள் இருக்கிறார் நம்பிக்கை தான் வாழ்க்கை" என்று நம்பிக்கை தரும் வகையில் பதிவிட்டுள்ளார்.

சொந்த வீடு கனவு சார்

மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவது எப்போதும் ஒரு சிறந்த முடிவாகும்; அதிலும் 10 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்ந்தெடுப்பது பணத்தை மிச்சப்படுத்த உதவும் ஒரு வழியாகும். அதற்கு இணையான சொத்துக்களின் ஆதரவு மன அழுத்தத்தைக் குறைக்கும் அதே வேளையில், அந்த நிதிப் பொறுப்பு உங்களை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, 'சொந்த வீடு' என்ற உணர்வு ஈடு இணையற்றது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+