தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் , கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த வழக்குகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன் மற்றும் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக, திமுக எம்.பி கிரிராஜன் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அதில் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், எல்இடி பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதே போல், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி,கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன.
இவர்கள் மட்டுமல்லாமல், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போன்றவற்றின் விசாரணையும் நிலுவையில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் மட்டுமே வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி, வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய முடியும். மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரமும் உள்ளது.
தற்போது மத்தியில் ஆளும் கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காகவே அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. எனவே, சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து












Click it and Unblock the Notifications