"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக தனது தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டது. இதையடுத்து நேற்று திமுக தனது தேர்தல அறிக்கையை வெளியிட்டது. இருகட்சிகளும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் போட்டிபோட்டு கொண்டு கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் தான் இரு தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு விஷயங்கள் ஒன்றாக உள்ளன. இதனால் அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்தா? என்று நெட்டிசன்கள் கேள்வி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். மொத்தம் 297 வாக்குறுதிகளுடன் மக்களை ஈர்க்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து இன்று திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையிலும் மாணவர்கள், மகளிரை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தான் அதிமுக - திமுக தேர்தல் அறிக்கையில் சில முக்கிய விஷயங்கள் ஒன்றாக உள்ளன. அதுபற்றிய விவரங்கள் இங்கு பார்க்கலாம்.
அதன்படி அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அரிசி குடும்ப அட்டைதார மகளிருக்கு ஃபிரிட்ஜ் வழங்குவதாக அறிவித்தது. இதற்கு போட்டியாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் வருமான வரி செலுத்ததாக குடும்ப மகளிருக்கு ரூ.8,000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களுக்கான கூப்பன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக வழங்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக அதிகரிக்கப்படம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல் திமுகவும் முதியோர் உதவித்தொகையை ரூ.2,000 ஆக அறிவித்துள்ளது.
மீன்பிடி நிவாரண தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தப்படம் என்று அதிமுக தெரிவித்தது. அதேபோல் மீன்பிடிநிவாரண தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லுக்கான ஆதார விலையை ரூ.3,500 ஆகவும், கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் நெல்லுக்கான ஆதார விலையை ரூ.3,500 ஆகவும், கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,500 ஆக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, பார்த்தால் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை மீன்பிடி நிவாரண தொகை, நெல் ஆதார விலை, கரும்பு ஆதார விலைகள் உள்ளிட்டவை ஒன்றாக உள்ளன. இதனால் அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்ததா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications