சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
லோக்சபத தேர்தலில் 2ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

4 பேர் மட்டுமே அனுமதி
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சுற்றியும் 100 மீட்டர் தூரம் வரை கூட்டமாக வரக்கூடாது என்றும், அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்துக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளனர்.

செலவின பார்வையாளர்கள்
இந் நிலையில் சென்னை மாவட்டத்தில் 3 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 தொகுதிகளுக்கும் தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வடசென்னை பார்வையாளர்கள்
அதன்படி, வடசென்னை லோக்சபா தொகுதிக்கு சஞ்ஜீவ் குமார் தேவ், விவேகானந்த் மெளரியா ஆகிய இருவரும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தென் சென்னை தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை பார்வையாளர்கள்
தென்சென்னை தொகுதிக்கு எம்.நவீன், பி.எல். குருபிரசாத் ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக செயல்படுவர். மத்திய சென்னை தொகுதிக்கு ஆர்.எம்.முஜூம்தர், வி.என். மங்கராஜு ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications