இரட்டை இலை யாருக்கு? எடப்பாடி - ஓபிஎஸ் உற்றுப்பார்க்கும் "சிவக்குமார்".. "லகான்".. ஆஹா யாருங்க இவரு
எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வர உள்ளது.
சென்னை: அதிமுக இரட்டை இலை சின்னம் முடக்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர் கையில்தான் உள்ளது. அந்த தேர்தல் நடத்தும் அலுவலர் யார்? அவர் எப்படி முடிவு எடுப்பார்? என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த பொதுக்குழு வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கு இடையில் ஈரோடு கிழக்கில் ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது.

சின்னம் முடங்கும் நிலை
இதனால் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்தே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் பதில்
ஆகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வர உள்ளது.

இடைக்கால உத்தரவு
இதில் தேர்தல் ஆணையம் சொன்ன பாயிண்ட் மிகவும் முக்கியமானது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதிமுக இரட்டை இலை சின்னம் முடக்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஏனென்றால் அதிமுக பொதுக்குழு முடிவுகள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே பழைய விதிப்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பி பார்மில் கையெழுத்து போட வேண்டும். அப்படி கையெழுத்து போடவில்லை என்றால் சின்னம் முடங்கும்.

சின்னம் முடங்கும்
இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர் கையில்தான் உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்தான் முடிவு எடுக்க வேண்டும். பொதுவாக இவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து முடிவு எடுப்பார். உச்ச நீதிமன்றம் இதில் தேர்தல் அலுவலர் இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறிவிட்டால், தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணையத்தில் உள்ள கோப்புகள் அடிப்படையில் முடிவு எடுப்பார். அந்த கோப்புகளில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளன. அதனால் இருவரும் கையெழுத்து போட்டால் மட்டுமே அவர் சின்னத்தை ஏற்பார். இல்லையென்றால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.
-
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications