சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு
சென்னை: சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதையடுத்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு நேற்று மாலை 4.52 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில் நிறுத்துமிடத்தின் அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார். ஆனால் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரயிலில் இருந்து குதித்து ஓட்டுநர் பவித்ரன் உயிர் தப்பினர்.

கட்டுப்பாட்டை இழந்த ரயில்
அதே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேடை மீது ஏறி நின்றது. இந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இதனால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் இரண்டு பெட்டிகளும் ரயில் மோதிய இடத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.

ரயில் மோதிய வேகம்
ரயில் மோதிய வேகத்தில் புழுதி பறந்தது. மற்றபடி யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து அங்கிருந்த சில ரயில் பயணிகள் கூறுகையில், பணிமனையிலிருந்து ரயில் மெதுவாகத்தான் வந்தது. நடைமேடையில் இருந்தவர்களை பார்த்து ஓட்டுநர் விலகிச் செல்லுமாறு கையசைத்தார்.

யாருக்கும் காயமில்லை
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நடைமேடையில் ரயில் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ரயில் நிலையத்திற்கு மெதுவாகத்தான் ரயில் வருகிறது. அப்போது திடீரென ரயிலின் என்ஜின் உள்ள பெட்டி நடைமேடையில் ஏறி இறங்கியது. இதனால் கடைகள் சேதமடைந்தன.

பதைபதைப்பு
இந்த வீடியோவை பார்க்கும் போதே நெஞ்சம் பதை பதைக்கிறது. இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரயில் பிரேக் பிடிக்காமல் போனது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications