அதிரடி.. இன்று முதல் சென்னையில் மின்சார ரயில் சேவைகள் 323 ஆக அதிகரிப்பு.. ரயில்வே துறை அறிவிப்பு
சென்னையில் இன்று முதல் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன
சென்னை: இன்று முதல் சென்னையில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது... ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அதன்படி, இப்போதைக்கு 279 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி 323 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
கடந்த 3 மாதமாகவே சென்னையில் தொற்று அதிகமாக இருந்தது.. தலைநகரில் தொற்று என்றாலே பாதி தமிழகத்துக்கு கிலி வந்துவிடும்.
இதையடுத்து ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையில் எடுத்தது..

அதிகாரிகள்
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை களத்தில் குதித்தனர்.. லாக்டவுன் போடப்பட்டது பெருமளவு பலனையும் தர தொடங்கி உள்ளது.. தொற்று பாதிப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. இதையடுத்து பல்வேறு தளர்வுகளும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அமலாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்னையில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறையும் அறிவித்துள்ளது.

எண்ணிக்கை
சென்னை ரயில்வே கோட்டமும், மின்சார ரயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ஏற்கனவே கடந்த 7-ம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்தது. இப்போது, இன்று முதல் மேலும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை 323 ஆக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது...

சிறப்பு ரயில்கள்
சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்!!மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 ரயில்களும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில்களும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில்களும், என 323 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அறிவிப்பு
ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.. மேலும் 20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications