பழைய பேட்டரிகளுக்கு QR + ஆதார் நம்பர்! மின்சார வாகனங்களில் பெரிய மாற்றம்: மத்திய அரசு குட்நியூஸ்
சென்னை: மின்சார வாகன பேட்டரிகளில் போலியை தடுக்கவும், நுகர்வோரின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பேட்டரிகளை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கவும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதனால் பேட்டரியின் நிலை, சார்ஜ் தரம், வெப்ப நிலை போன்ற தகவல்களை கண்காணிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.. மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த குட்நியூஸ் என்ன தெரியுமா?
மின்சார வாகனங்களை இயக்க அடிப்படையே மின்சார வாகன பேட்டரியாகும்.. பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களில் எரிபொருள் டேங்க் எவ்வளவு அவசியமோ, அதே அளவு அவசியம் மின்சார வாகனங்களுக்கு பேட்டரி..

மின்சார வாகனங்கள்
இந்த பேட்டரி சார்ஜ் செய்யப்படும்போது மின்சாரம் சேமிக்கப்படுகிறது... வாகனம் ஓடும்போது, அந்த மின்சாரம் மோட்டாருக்கு அனுப்பப்பட்டு, சக்கரங்களை சுழல செய்து அந்த வண்டியையே நகர்த்துகிறது.
இன்றைய மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எடை குறைவாகவும் அதிக சக்தி சேமிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளன.
பழைய பேட்டரிகள்
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், வாகனம் பேட்டரியின் திறன் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல முடியும்.. அதுமட்டுமல்ல, பேட்டரியின் ஆயுள் பல ஆண்டுகள் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்படுகிறது.. மின்சார வாகனத்தின் மைலேஜ், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இந்த பேட்டரியே...
இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான செய்தி வெளியாகி உள்ளது... அதாவது மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கான அதிக திறன் கொண்ட பேட்டரிகளின் மறுசுழற்சியை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
லித்தியம் பேட்டரி
இந்தியாவை பொறுத்தவரை மின்சார வாகன துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பொதுவாக போக்குவரத்துக்கான கார்கள் மட்டுமல்ல, சிறிய சரக்கு லாரிகளும் மின்சார வாகனமாக மாறி வருகின்றன. இவற்றின் இதயமாக லித்தியம் அயான் பேட்டரிகள் செயல்படுகின்றன.
போலி பேட்டரிகளை தடுப்பது, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பது, மறுசுழற்சியை ஊக்குவிப்பது, சுழற்சி பொருளாதாரத்தை ஆதரிப்பது ஆகிய நோக்கங்களுக்காக மத்திய அரசு ஒவ்வொரு பேட்டரிக்கும் தனிப்பட்ட அடையாளத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்குதான் 'பேட்டரி பேக் ஆதார்' என்று பெயர்..,
ஆதார் நம்பர்கள்
இந்த ஆதார் நம்பர் மொத்தம் 21 நம்பர்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு பேட்டரிக்கும் இந்த இலக்கங்கள் கொண்ட க்யூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். நுகர்வோர் அல்லது சர்வீஸ் மையங்கள் இந்த குறியீட்டை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், பேட்டரியை உற்பத்தி செய்த நிறுவனம், பேட்டரி விவரங்கள், பயன்படுத்திய ரசாயன கலவை போன்ற தகவல்கள் கிடைக்கும்.
அத்துடன் பேட்டரியின் ஆரோக்கியம், வெப்ப நிலை, சார்ஜ் ஏற்ற இறக்கம், அதன் இறுதி நிலை போன்ற விவரங்களும் கண்காணிக்க முடியும். இந்த தகவல்களை உற்பத்தியாளர்கள், சர்வீஸ் மையங்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் மட்டுமே அணுக முடியும். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பேட்டரி மேலாண்மை அமைப்பும் உருவாக்கப்படுகிறது.
மறுசுழற்சி முயற்சி
இந்த அமைப்பு மின்சார வாகனத்தின் தரவு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.... மத்திய அரசு இதற்கான வரைவு வழிகாட்டுதலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் மின்சார வாகன துறையின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, மறுசுழற்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் மூலம், நாட்டில் மின்சார வாகனங்களின் பேட்டரி மறுசுழற்சி அதிகரிக்கும். பேட்டரியின் நிலையை கண்காணிப்பதால், வெப்ப நிலை அதிகரிப்பு, சார்ஜ் ஏற்ற இறக்கம் போன்ற பிரச்சனைகள் முன்கூட்டியே கண்டுபிடித்துவிட முடியும்... போலி பேட்டரிகள் சந்தையில் விற்பனை ஆகாமல் தடுப்பதற்கும் இது உதவும்..
சுழற்சி பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில், பழைய பேட்டரிகளை பாதுகாப்புடன் மறுசுழற்சி செய்யவும் இந்த திட்டம் வழிகாட்டும்... மொத்தத்தில் மத்திய அரசின் இந்த அதிரடியானது, நுகர்வோரின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications