ஆன்லைனிலேயே கரண்ட் பில் கட்டலாமா..கூகுள் பே மூலம் மின் கட்டணம் கட்டலாமா? ஜஸ்ட் 2 நிமிஷம்தான் பாருங்க
சென்னை: தமிழக மின்வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவே, இணையவழி பயன்பாட்டினை அதிகரித்து வருகிறது.. அந்தவகையில், கரண்ட் பில்லை, நீங்கள் ஆன்லைனில் எப்படி செலுத்த வேண்டும் தெரியுமா?
தமிழ்நாட்டிற்கு மின்சேவை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணத்தை வசூல் செய்துவருகிறது... இதற்கு முன்பு, ரூ.5,000 மேல் கட்டணம் செல்லும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கி வரவோலை எனப்படும் (டி.டி) அல்லது காசோலை மூலமாக மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது.

திருத்தங்கள்: இதற்கு குறைவான கட்டணத்தை, மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் நேரடியாக செலுத்த முடியும் என்றும் நிலை இருந்தது. ஆனால், இதில் சில திருத்தங்கள் சமீபத்தில் செய்யப்பட்டன.
கட்டணம்: அதன்படி, ரூ.1000-க்கும் மேல் (372 யூனிட்) மின் கட்டணம் வரும் பட்சத்தில், மின்வாரிய அலுலகத்துக்கு சென்று கவுன்ட்டரில் இனி பணம் செலுத்த முடியாது என்றும் ஆன்லைனில் மட்டும்தான் கட்ட வேண்டும்,
அப்படி ஆன்லைனில் பணம் செலுத்த முடியாதவர்கள், வரைவோலை அல்லது காசோலை மூலமாகவே பணம் கட்ட முடியும் என்றும் திருத்தங்களை கொண்டுவரப்போவதாக தகவல்கள் வந்தன. அதேசமயம், பொதுமக்களின் வசதிக்காகவே, மின்துறையிலும் ஆன்லைன் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் கட்டணம்: வழக்கமாக, அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டணங்கள் எதுவானாலும், நேரில் சென்று மட்டுமே செலுத்தப்பட்டு வந்தநிலையில், இப்போது அனைத்துமே எளிதாகிவிட்டது.. பொதுமக்களின் வசதிக்காகவே, கட்டணங்களை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதிகள் அறிமுகமாகியிருக்கின்றன. இதில் மின்கட்டணமும் ஒன்றாகும்.
இதனால், நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.. அத்துடன், ஆன்லைனிலேயே பலவழிகளில் பணத்தை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்தி மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று பார்ப்போம்.. இதற்காகவே, TANGEDCO என்று சொல்லப்படும் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷனின் பிரத்யேக வெப்சைட்டை உருவாக்கியிருக்கிறது.
- TANGEDCO-வின் என்ற இந்த வெப்சைட்டிற்குள் முதலில் சென்று, அங்கிருக்கும் "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
- ஆன்லைன் சர்வீஸின் கீழே, மொத்தம் 5 ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இதில், "ஆன்லைன் பில் பேமென்ட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில், நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்து உங்களிடம் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் இருந்தால், அவைகளை பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம். (ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் ஆன்லைன் பேமெண்ட் செய்வதற்காக புதிதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக, குவிக் பே (Quick Pay) என்ற ஆப்ஷனை பயன்படுத்தியே, ஒவ்வொரு முறையும், கரண்ட் பில் கட்டிக் கொள்ளலாம்)
- இப்போது ஸ்கிரீனில், வலது பக்கம் "குவிக் பே" என்ற ப்ளூ கலர் பட்டனை கிளிக் செய்தால், இன்னொரு ஸ்கிரீன் தோன்றும். அதில் உங்களது, கரண்ட் பில் கட்டணத்துக்கான, கஸ்டமர் நம்பரை பதிவிட வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் தரப்பட்டிருக்கும் Captcha நம்பர்களை டைப் செய்து SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, உங்கள் வாடிக்கையாளர் எண், உங்களுடைய பகுதி, மின் கட்டணத்திற்கான தொகை, கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று அனைத்து விபரங்களும் ஸ்கிரீனில் தோன்றும்.
நீங்கள் கரண்ட் பில்லை செலுத்த, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கியூ ஆர் கோட், யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் முறைகளையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்ல, TANGEDCO வெப்சைட் மட்டுமல்லாமல் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற மற்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகள்மூலமும் கரண்ட் பில் கட்ட முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications