கரண்ட் பில்லை பார்த்து கலங்கும் மக்கள்.. மின்வாரியம் தந்த பதில்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த கோடை காலத்துடன் இந்த கோடை காலத்தை ஒப்பிடும் போது மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த முறை மிக அதிகமான மின் கட்டணத்தால் அவதிப்பட்டு வருகின்றன.
2022 கோடை காலத்துடன் 2023 கோடை காலத்தை ஒப்பிடும் போது, கரண் பில்களில் இருந்து வரும் வசூல் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனினும்தற்போதைய நிலையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதுதான் ஒரே வழி என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருப்பாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்திகளின்படி, பனையூரில் உள்ள ஒரு உயரதர வில்லாவில் குடும்பத்துடன் வசிக்கும் சுல்பீனா, என்பவருக்கு மே 2023 இல் சுமார் 9,000 யூனிட்டுகளுக்கு மின் கட்டணமாக ₹1 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு மே மாதம், அதே யூனிட்டுகளுக்கு ₹60,000 மட்டுமே வந்திருந்தது.

இது தொடர்பாக சுல்பீனா கூறும் போது, கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மின் கட்டண உயர்வுக்குப் பிறகு மாதாந்திர பில்கள் அதிகரித்தாலும், இப்போது வந்திருப்பது மிகக் கடுமையான உயர்வு ஆகும். எங்கள் செல்லப்பிராணிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க கோடையில் நாங்கள் 24 மணிநேரமும் ஏசிகளை இயக்கினோம் என்றார்.
பாடியில் உள்ள வளர்மதி என்பவர் வீட்டில், 2022ம் ஆண்டு கோடை காலத்தில் மின் நுகர்வுக்கான மின் கட்டணம் ₹ 5,000 ஆகஇருந்து அப்படியே டபுள் ஆகி உள்ளது. ஆனால் அவரது மின் நுகர் என்பது வெறும் 10% மட்டும் தான் அதிகரித்துள்ளது.
சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பி விஸ்வநாதன் என்பவர் கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் 620 யூனிட்கள் பயன்படுத்தியதற்கு ₹2,930 செலுத்தி உள்ளார். ஆனால் தற்போது ஜூலை மாத இறுதியில் 1,164 யூனிட்களை பயன்படுத்தியதற்காக கிட்டத்தட்ட அதைவிட மூன்று மடங்கு தொகையை செலுத்தி உள்ளார்
தற்போதைய நிலையல் பல நுகர்வோர்கள் மின் கட்டணத்தை தாங்கள் நகைகளை அடகு வைக்க வேண்டும் அல்லது யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சிலர் கரண்ட் பில்லை கட்ட, மாத வருமானத்தில் கணிசமான பகுதியை இழக்க வேண்டும்என்ற அளவில் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இதனிடையே கடந்த 2022ம்ஆண்டு மே மாதம் 734 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, மே 2023 இல் கரண்ட் பில்களில் இருந்து மின்சார வாரியத்திற்கு வசூல் 28% அதிகரித்து கிட்டத்தட்ட ₹939 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில், கோடைக்காலம் நீடித்த காரணத்தால் மின்சார நுகர்வு கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டண வசூல் ஜூன் 2023 இல் ₹734 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 40% அதிகரித்து ₹1,086 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் வாரம் வரை வசூல் 30% தாண்டியுள்ளது என்றும் மேலும் மின்கட்டண வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மின்வாரிய அதிகாரிகள் மின்கட்டண உயர்வு குறித்து கூறும் போது, இப்போது மின் கட்டணம் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான விநியோக இணைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனி மேல் வீட்டு இணைப்பின் கீழ் வசூலிக்கப்படாது (கமர்சியல் கட்டணம்) என்றார்கள்.
அதேநேரம் தற்போதைய மின் கட்டண அதிகரிப்பு காரணம், 800 யூனிட்டுகளுக்கு மேல் உட்கொள்பவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் உள்ள 2.41 கோடி வீட்டு இணைப்புகளில், 97 லட்சம் நுகர்வோர்கள் தங்கள் நுகர்வு 100 யூனிட் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை. நுகர்வு 500 யூனிட்டுகளுக்குக் குறைவாக இருந்தால், 101-200 யூனிட்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹2.25 மானியமாக வழங்கப்படுகிறது. எனவே மின் கட்டணத்தை சிக்கனமாக பயன்படுத்துவதே செலவைக் குறைக்க ஒரே வழி என மின்வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் மின்சார வாரியம் (Tangedco) வீட்டு மின்சார நுகர்வினை பெரிய அளவில் தவறாக கணக்கிடுவதாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
அதேநேரம் சில இடங்களில் இபி பில்லை கணக்கிட ஆள் பற்றாக்குறை காரணமாக தாமதமாக கணக்கிடப்படுவதால் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் (சிஏஜி) மூத்த ஆராய்ச்சியாளர் கே விஷ்ணு மோகன் ராவ் கூறும் போது, மின்சாரத்திற்கான அதிக நிலுவைத் தொகையும் அதிக மின் கட்டணங்களுக்கு ஒரு காரணம். தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்துவதால் தான், வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் குறைவாக உள்ளது.
தற்போதைய நிலையில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்திற்கு மாநில அரசு மானியத்தை அதிகரிப்பது மட்டுமே ஒரே வழி. வரும் ஆண்டுகளில் அனல்மின் நிலையங்கள் படிப்படியாக அகற்றப்படும்போது, மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படியான நிலை வந்தால், மக்கள் சோலார் பேனல் மூலம் சூரிய மின்சக்தியை நாட வேண்டியநிலை வரலாம்.
இப்போதைய நிலையில் வீடுகளில் ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ், அயர்ன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின்கள் மற்றும் பாத்திரங்களை கழுவும் இயந்திரம் மற்றும் வெற்றிடங்களை துடைக்கும் மாப்ஸ் கருவி போன்றவை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துபவவை.இவற்றில் சிலவற்றை பயன்படுத்துவதை குறைத்தால் மின் கட்டணம் குறையும்" என்றார்.












Click it and Unblock the Notifications