மின்சார வாரியம்.. ஒரேடியாக எகிறிய மின்கட்டணம்.. நிலுவை தொகைக்கு அபராதமா? தமிழ்நாடு அரசு முடிவு என்ன
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வரும்நிலையில், இன்னொரு கோரிக்கையும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த வருடம் செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது.. இந்தநிலையில், மத்திய அரசு மின் கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்தது.
கட்டண உயர்வு: இதையடுத்து, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இதனை தமிழக அரசும் அமல்படுத்தியது. அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது என்றாலும், வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
விசைத்தறி தொழிலாளர்கள்: குறிப்பாக, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருத்த அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.. காரணம், 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகிறார்கள்.. இதன் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகின்றன.. இந்த விசைத்தறிகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டதால், ஏற்கனவே நலிவடைந்துள்ள தொழிலாளர்கள், மேலும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
அடுத்த கோரிக்கை: அதனால் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் மாதம் மின்கட்டணம் குறைக்கப்பட்டது என்றாலும், விசைத்தறி மின் கட்டணத்தை கடந்த 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர், சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரிடம் இந்த மனுவை வழங்கியுள்ளார்..
அந்த மனுவில், "மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை அரசும் விரைவில் பரிசீலிக்கும் என்று நம்பப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications