மின்சார வாரியம் திடீர்னு போட்ட உத்தரவு.. "முடிச்சிட்டு மெயில் அனுப்புங்க".. தமிழக மின்வாரியம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது.. என்ன காரணம்?
மின்சார வாரியத்தில் சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பி வருகின்றன.. மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
லஞ்சம்: அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாகவே உள்ளது... நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், சிலர் லஞ்சம் வாங்கி சிக்குவது அதிகரித்து வருகிறது.. இவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், லஞ்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை..

அதனால்தான், லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மின்வாரியம் சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது.. குறிப்பாக, சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் வார்னிங் தந்திருந்தது.
விஜிலென்ஸ்: அதுமட்டுமல்ல, ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். என்றும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வேண்டும்" என்றும் சற்று காட்டமாகவே எச்சரித்திருந்தது.
சில நாட்களுக்கு முன்புகூட, காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.. புதிய மின் மீட்டரை யார் கொண்டு வந்து பொருத்துவதாக சொன்னாலும், வாடகை வீட்டில் இருப்பவர்கள், உடனடியாக வீட்டு ஓனருக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றும், அப்படி அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கே நேரடியாக போன் செய்து உறுதி செய்யுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தது.
மீண்டும் அறிவிப்பு: பிறகு இதே எச்சரிக்கையை மின்வாரியமும் பொதுமக்களிடம் விடுத்து, ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டது. இந்நிலையில், மின்வாரியம் மற்றொரு அதிரடியை பிறப்பித்துள்ளது.
மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மெயில்: குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை பொருத்தும் பணிகள் துரிதமாகி உள்ளன.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications