100 யூனிட் மின்சாரம்.. ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளா? வீட்டுக்கே கிளம்பி வர்றாங்களாம் ஆபீசர்ஸ்! செம
சென்னை: தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள். குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல் தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும். பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து, இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக விளக்கத்தை தந்திருந்தது.
பயன்பாடுகள்: அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுப்பயன்பாடு: அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த அதிரடியை கையில் எடுத்துள்ளது..
யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால் அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில், 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துவரும்நிலையில், தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு ஆரம்பமாகியிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications