Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ரோ + குடிநீர் + இபி.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எடுத்த "மேஜர்" முடிவு.. உடனே இதை படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், முதன்மைச் செயலாளர் / மேலாண்மை இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட், முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலண்மை இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்குநர், இணை ஆணையர். போக்குவரத்து காவல் துறை, தலைமைப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, தலைமைப்பொறியாளர், நீர்வள ஆதார துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களின் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Electricity, EB, Water and Metro: Tamil Nadu CS Shiv Das Meena important decision on storm water drain

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த 15 நாட்களுக்குள் நடைபெற்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய உண்மை நிலை குறித்து ஒரு பிரத்யோக குழு மூலம் தகவல் பெற்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 62 இடங்களில் தடுப்பரண் (Barricade) அமைத்தல். மின்சார கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய் மாற்றியமைத்தல், விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மண்டலம்-6-ல் உள்ள ஜி.கே.எம். காலணியில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், பிரகாசம் சாலை, மின்ட் சாலை ஆகிய சாலைகளில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அண்ணா சாலையில் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் விடுபட்ட இடங்களில் அறிவுருத்தப்பட்டது. மழைநீர் வடிகால் விரைந்து முடிக்குமாறு இக்கூட்டத்தில் கடந்த 02.08.2023 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ச்சி நிலை குறித்து அரசு தலைமைச் செயலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது பேரிடர் மேலாண்மையின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் 30.09.2023-க்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுருத்தப்பட்டது. ஈ.வே.ரா. பெரியார் சாலையில் எழும்பூர் அருகே புனித ஆன்ரோ சர்சிற்கு அருகில் தேங்கும் மழைநீரை கூவம் ஆற்றில் சேர்க்க நெடுஞ்சாலை துறை மற்றும் இரயில்வே துறையும் இணைந்து குறுக்குக் கல்வெட்டு அமைக்கும் பணியினை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய வடிகால்களில் Silt Catch Pit இல்லாத இடங்களை கண்டறிந்து இவ்விடங்களில் புதிதாக Silt Catch Pit அமைக்க அறிவுருத்தப்பட்டது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மற்றும் உட்புற தெருக்களில் புதிய சாலைகள் அமைக்க 506 சிப்பங்களில் 1,473 கிலோமீட்டர் நீளத்திற்கு 8,862 சாலைகளில் ரூ.908.08 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு. 430 சிப்பங்களில் 7,848 சாலைகளில் 1,243 கிலோமீட்டர் சாலைகள் ரூ.821 கோடியில் அமைக்க பணியாணை வழங்கப்பட்டதில் 335 கிலோமீட்டர் நீளத்திற்கு 2,012 எண்ணிக்கையில் சாலைப்பணிகள் ரூ.240 கோடி செலவினத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சியில் வார்டு 35-ல் என்.எம். சாலையில் வெள்ளநீர் வடிய மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.ஏ.எப் சாலையில் மழைநீர் வடிகால் பணியில் 25 சதவீகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி பணிகளை 30.09.2023க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சேக்காடு அண்ணாநகர் பிரதான சாலை வலம்புரி விநாயகர் கோவில் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை 15.09.2023-க்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில் குருசாமி பிரதான சாலை, பல்லாவரம் துரைப்பாக்கம்
200 அடி சுற்றுவட்டச்சாலை மற்றும் பிற இடங்களில் நடைபெற்று வரும்
பணியினை 30.09.2023-க்குள் முடிக்குமாறு அறிவுருத்தப்பட்டது.

மேலும், நெடுஞ்சாலை துறையினால் தற்போது 6.44 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் பிரதான சாலைகளில் (Macro Drain) பெரிய மழைநீர் வடிகால்வாய் 1.26 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணிகளுக்கு ஒப்பப்புள்ளிகள் பெறப்பட்டு இவற்றில் 5.63 கிமீ மழைநீர் கால்வாய் மற்றும் 0.8 கிமீ (Macro Drain) பணிகளும் முடிவுற்றுள்ளது. மேலும், ஐந்து இடங்களில் கல்வெட் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், நீர்வளத்துறையின் மூலம் எட்டு எண்ணிக்கை பணிகள் 250 கோடி மதிப்பில். பள்ளிக்கரணை அணைஏரி. மணலி புதுநகர். கொளத்தூர் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, உபரி நீர் கால்வாய் ஆகிய பணிகளை விரைந்து 15.09.2023-க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஓட்டேரி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆகாயதாமரை அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணிகள் மற்றும் அடையாறு, கூவம் மற்றும் எண்ணூர் முகத்துவாரம் பகுதிகளில் மணல் திட்டுகளை அகற்றி மழைநீர் விரைவாக வடிக்க ஏதுவாக பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நடப்பாண்டு பருவமழைக்கு முன்னரே பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

பணிகள் நடைபெறும் பொழுது பல்வேறு துறைகளால், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருத்திற்கொண்டு Barricading அமைத்து அதன் மீது பச்சை துணி கொண்டு மூடி பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக, அனைத்து சேவைத்துறையினர் ஆகிய மின்சார வாரியம், இரயில்வே, மெட்ரோ இரயில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதார அமைப்பு துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+