சென்னை மக்களே.. இன்று பல முக்கிய இடங்களில் மின் தடை.. கோவையில் இந்த ஏரியாக்களில் பவர் கட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. கோவையிலும் இன்று ஒருசில பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னை மற்றும் கோவையில் இன்று (ஆகஸ்ட் 12) முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Electricity supply to be suspended today in Chennai and coimbatore

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நங்கநல்லூர்: நங்கநல்லூர் இந்து காலனி பகுதி, என்ஜிஓ காலனி, கேகே நகர், டீச்சர்ஸ் காலனி பகுதி, எஸ்பிஐ காலனி எக்ஸ்ட், ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், விஜய் அவென்யூ, எஸ்ஐபி காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், பிவி நகர் தெற்கு பகுதி, குபேரன் நகர், எல்ஐசி நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை.

தாம்பரம் : பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் உயர் சாலை, சடகோபன் நகர். மடம்பாக்கம் ஏஎல்எஸ் நகர் பகுதி ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட தெரு, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் மெயின் ரோடு பகுதி, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சுமேரி நகரம். ராஜகீழ்பாக்கம் மணவாள நகர், விஜிபி பொன் நகர், பாக்கியம் நகர், ஏரிக்கரை தெரு, லட்சுமி நகர், செந்தில் அவென்யூ, பிரசாந்த் காலனி, நவநீதம் நகர். புத்தங்கல் பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள்.

மிட்டனமல்லி : ஐஏஎஃப் சாலை, மிட்டனமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், ராஜீவ் காந்தி நகர், சிஆர்பிஎஃப் குவார்ட்டர்ஸ், சிஆர்பிஎஃப் நகர், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தாம்பரம்: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை செயின்ட், விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்), சேலையூர் மடம்பாக்கம் அலமேலுபுரம் ஏஎல்எஸ் நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை,
வடக்குப் பகுதி, வடக்கு மாட, கிழக்கு மாட மேற்கு மாடத் தெரு, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் பிரதான சாலைப் பகுதி, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, பெருங்களத்தூர் முடிச்சூர் 33/11 KV எஸ்எஸ் காமராஜர் நகர் பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர்,
குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் உயர் சாலை, சடகோபன் நகர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, ராயப்பேட்டை, பெரம்பூர், சித்தாலபாக்கம், போரூர் பகுதிகளில் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில்: கோவை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். தச்சநல்லூர், நல்மையப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு மற்றும் தெற்கு பாலா பாகியா நகர், மதுரை சாலை, திலக் நகர், பாபுஜிவ்நகர், சங்கர்நாகர் உப்புந்துறை, மணிமூர்த்தம், துடியலூர் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.டி.என்.வி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+