மின் கட்டணம் மாதம் இவ்வளவா? கரண்ட் பில் பார்த்து ஷாக் ஆகி அட்மின் ஆன பெண்.. மின்சார வாரியம் விளக்கம்
சென்னை: சமீப காலமாகவே பல பகுதிகளில் மின் கட்டணம் திடீரென அதிகமாக வருகிறது என்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன.. இந்த கரண்ட் பில்லை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.. ஆனால் கேரளாவில் ஒரு பெண் கரண்ட் பில்லை கண்டு, ஆஸ்பத்திரியிலேயே அட்மிட் ஆகிவிட்டாராம்.. என்ன நடந்தது கேரளாவில்? யாரிந்த பெண்,
சிலசமயம் தவறுலாக கரண்ட் பில் வாடிக்கையாளர்களுக்கு வந்துவிடுவதுண்டு... ரீடிங் கணக்கை தவறாக எடுப்பழ, ஸ்லாப் முறையால் கட்டணம் திடீரென உயர்வது, ஸ்மார்ட் அல்லது டிஜிட்டல் மீட்டர் மாற்றத்துக்குப் பிறகான தொழில்நுட்ப குழப்பங்கள் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக மின்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்வாரியம் தந்த அதிர்ச்சி
சிலசமயம் மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்தல், மின் கசிவு அல்லது வயரிங் கோளாறு, முந்தைய நிலுவைத் தொகை தற்போது சேர்க்கப்படுவது போன்றவைகளாலும் கரண்ட் பில்கள் தவறாக வந்துவிடுவதுண்டு..
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. கான்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு ரூ.3.9 லட்சம் மின்சார கட்டணம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
அந்த வீட்டில் ஏர் கூலர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், இரண்டு ஃபேன் போன்ற அடிப்படை மின்சாதனங்களே பயன்படுத்தப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகை கட்டணமாக வந்ததை குடும்பத்தினர் நம்ப முடியாமல் திகைத்தனர்.
மின்சார கட்டணம்
வீட்டு உரிமையாளரான சந்திரசேகருக்கு கடந்த சில மாதங்களாக எந்தவொரு மின்சார கட்டணமும் வராததால், இதுகுறித்து விளக்கம் கேட்க மின்சார அலுவலகத்திற்கே நேரடியாக சென்றிருக்கிறார்.. அப்போது அவருக்கு ரூ.3 லட்சத்திற்கும் மேல் மின்சார கட்டணம் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்..
பிறகு சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தவறுதலாக இவ்வளவு பெரிய தொகை மின்சார கட்டணமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.
மின் இணைப்பு பாக்ஸ்
இந்நிலையில், கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது.. கொல்லம் மாவட்டம் ஆயூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.. இவர்கள் மூன்று பேர் மட்டுமே தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டுக்கு சிங்கிள் ஃபேஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை அதிகபட்சமாக ரூ.1,200 வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.
மின்வாரிய ஊழியர்கள் - மீட்டர் பாக்ஸ்
இந்த நிலையில், தற்போது அவர்களின் வீட்டுக்கு வந்த மின்வாரிய ஊழியர், வழக்கத்தை விட மிக அதிக மின் நுகர்வு பதிவாகியுள்ளதாக சொல்லி உள்ளார்.. மேலும், முறையாக கணக்கெடுக்காமல் அந்த ஊழியர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது... இதனால் குழப்பமடைந்த குடும்பத்தினர் மறுநாளே மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்கள்.. தங்களது குழப்பதையும் சொன்னார்கள்..
இதையடுத்து, மின்வாரிய அதிகாரியுடன் மீண்டும் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், மீட்டர் பாக்ஸை சோதனை செய்தனர். அப்போது போது மீட்டரில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு தம்பதி இருவரும் நிம்மதி அடைந்தனர்..
கரண்ட் பில் ஷாக் - மன அழுத்தம்
ஆனால், மின் ஊழியர்கள் கிளம்பி செல்லும்போது, கடந்த 2 மாதங்களில் 8,827 யூனிட்கள் மின் நுகர்வு நடந்துள்ளதாகவும், அதற்கான மின் கட்டணமாக ரூ.90,589 செலுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டு போனார்கள்.. இதைக் கேட்டதுமே அனிதா கடும் அதிர்ச்சியடைந்தார்... தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்துவிட்டது.. மனஅழுத்தம் காரணமாக அவரது ரத்த அழுத்தம் திடீரென உயர்ந்துவிட்டது..
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனிதாவை அனுமதித்தார்.. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அனிதாவை கவனித்து வருகிறார்கள்..
ஏசி கூட இல்லை - மின் சாதனங்கள்
இதுகுறித்து சுபாஷ் செய்தியாளர்களிட;kம சொல்லும்போது, என் வீட்டில் ஏசி கூட இல்லை.. அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களும் எதுவும் இல்லை.. அப்பறம் எப்படி இவ்வளவு அதிக மின்கட்டணம் வந்திருக்கிறது என்று தெரியவில்லை.. எங்களால் இன்னும்கூட இதை நம்ப முடியவில்லை.. இது தொழில்நுட்ப கோளாறு அல்லது கணக்கீட்டு பிழையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.. இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு எழுத்துப்பூர்வ புகார் அனுப்பி உள்ளேன்" என்று கவலையுடன் கூறுகிறார்.
மின் கட்டண பில்லைக் கண்ட பெண் அதிர்ச்சியடைந்து, ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications