தவெக கொடியில் யானை சின்னம்.. விஜய்க்கு நிம்மதி.. பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
சென்னை: விஜயின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்ததோடு தேர்தல் ஆணையத்தில் புகாரும் செய்திருந்தது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு பதிலளித்துள்ளது.
நடிகர் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், அண்மையில் தனது கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார். வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாநில கட்சியின் மாநில மாநாடும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, விஜயின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க போவதாக கூறியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி இது தொடர்பாக புகாரும் அளித்தது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:- கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை" என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கொடியில் வாகை மலருடன் இரண்டு போர் யானைகள் இடம் பெற்று இருந்தது. விஜயின் கட்சிக் கொடி அறிமுகம் செய்த சில மணி நேரங்களில், கொடி குறித்த பல்வேறு விமர்சனங்களும் எழத்தொடங்கின. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சியின் சின்னத்தை விஜய், தனது கட்சியின் கொடியில் வைத்து இருப்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில், தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும், நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.
அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தது.
இந்த மனுவுக்குத்தான் தற்போது தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. விஜய் கட்சியின் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications