முதுகில் குத்திட்டாரே! எலான் மஸ்க் போன ஒரே வாரத்தில்.. வசமாக ஆப்பு வைத்த டிரம்ப்.. மோதல் ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நாசாவை வழிநடத்த புதிய தலைவரை விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் இனி அந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப் எடுத்த இந்த முடிவு.. எலான் மஸ்க்கிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜாரெட் ஐசக்மேன் எலான் மஸ்க் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நபர் ஆவார். அவரின் நியமனத்திற்கு செனட் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மாற்றத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், ஐசக்மேனின் நியமனம் குறித்து செனட் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாசாவின் அடுத்த தலைவர் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு ஏற்றவராக இருப்பார். டிரம்ப் உடன் முழுமையாக ஒத்துப்போவது அவசியம், அப்படி ஒருவரை டிரம்ப் விரைவில் அறிவிப்பார்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லிஸ் ஹஸ்டன் தெரிவித்துள்ளார்.

Elon Musk Nominee is not accepted for the NASA chief Donald Trump to choose a new person

கருத்து வேறுபாடு

டந்த சில நாட்களாகவே அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் - டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சமீபத்தில்தான் DOGE தலைவர் பதவியில் இருந்து மஸ்க் ராஜினாமா செய்தார். கடந்த 5-6 வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் மஸ்க். நேரடியாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஒரு காலத்தில் ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக தீவிர வலதுசாரியாக மாறி குடியரசு கட்சி ஆதரவாளராக மாறிவிட்டார்.

கடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் நேரடியாக எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு கொடுத்தார். அதோடு அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு நிதி வழங்கினார். அந்த தேர்தலில் டிரம்ப் ஜெயிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக டிரம்ப் மாறினார்.

டிரம்ப் எலான் மஸ்க் கருத்து வேறுபாடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கினார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

இந்த பதவியை தற்போது எலான் மஸ்க் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் பென்டகன் அமைப்பின் சில போர் ரகசியங்கள் கசிந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா போர் செய்வதாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று DOGE தலைவர் எலான் மஸ்க்கிடம் விளக்கப்பட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பென்டகன் உடன் கடந்த மாதம் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதே சமயம் சீனா உடன் போர் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பென்டகன் ஆலோசனை நடத்துவதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனை செய்யலாம் என்றும் மஸ்க் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை டிரம்ப் மறுத்தார். இந்த விவகாரம் பெரிதானதும் அலறியடித்து பதில் சொன்ன டிரம்ப்.. அப்படி ஆலோசனை நடக்கவில்லை என்று கூறி இருந்தார். அதே சமயம் பென்டகன் அளித்த விளக்கத்தில் பென்டகன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் போர் பற்றி எல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனா உடன் போர் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டு டிரம்ப் அதிர்ச்சி அடைந்ததாகவும்.. இனிமேல் மஸ்க்கிடம் இது போன்ற விவரங்களை விவாதிக்க கூடாது.. அங்கே அவருக்கு என்ன வேலை.. நீங்கள் அவரிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்றும் டிரம்ப் பென்டகன் அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியலில் நிதி அளிப்பதை நிறுத்த போவதாக அல்லது அடியோடு குறைக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுவரை நிறைய கொடுத்துவிட்டேன்.. இனி கொடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

பெயர் நீக்கம்

இப்படிப்பட்ட நிலையில்தான் நாசாவை வழிநடத்த புதிய தலைவரை விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் இனி அந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. ஜாரெட் ஐசக்மேன் எலான் மஸ்க் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நபர் ஆவார். அவரின் பெயரை டிரம்ப் தற்போது நீக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+