X, சாட்ஜிபிடி வலைதளம் முடங்கியது.. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பாதிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: இந்தியா உள்பட உலகம் முழுவதும் எக்ஸ் வலைதள பக்கம் இன்று திடீரென முடங்கியது. இதனால் பலரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் கன்வா மற்றும் சாட்ஜிபிடியும் முடக்கத்தை சந்தித்துள்ளது.
தற்போது நாம் ஏராளமான சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூக வலைதள பக்கங்கள் அவ்வப்போது முடங்குவதும், அதன்பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதும் நடந்து வருகிறது.
அந்த வகையில் தான் இன்று பல்வேறு சமூக வலைதள பக்கங்கள் முடக்கத்தை சந்தித்துள்ளன. எக்ஸ், கன்வா, சாட் ஜிபிடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் மக்கள் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று மாலை 5.20 மணியளவில் பலரும் எக்ஸ் பக்கத்தின் உள்ளே செல்ல முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். Refresh செய்ய முடியவில்லை. இந்த எக்ஸ் வலைதள பக்கத்தின் முடக்கம் என்பது தொழில்நுட்ப குறைபாடு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பலரும் பிற சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைதளம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
இதனை Downdetector.com என்ற இணையதளம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த இணையதளம், ‛‛இன்று மாலை 5.20 மணிக்குள் எக்ஸ் வலைதளத்தை பலராலும் பயன்படுத்த முடியவில்லை. பயனர்களிடமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போனில் எக்ஸ் வலைதள பக்கத்தை பயன்படுத்துவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் புகார் அளித்தவர்களில் 61 சதவீதம் பேர் செல்போன் பயன்பாட்டாளர்கள் ஆவார்கள். வலைதளம் வழியாக பயன்படுத்துவோர் 28 சதவீதம் பேரும், சர்வர் கனெக்சன் பிரச்சனையால் 11 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன்வா (Canva) செயலியும் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது. இது ஆன்லைன் கிராபிக் டிசைன் பிளாட்பார்ம் ஆகும். சோசியல் மீடியாவில் கன்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கும் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தி வீடியோ, போஸ்டர், பிரசென்டேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்டவற்றை உருவாக்கலாம். இந்நிலையில் தான் கன்வா-வும் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது.
மேலும் சாட்ஜிபிடியும் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் எக்ஸ், கன்வா, சாட்ஜிபிடி உள்ளிட்டவை முடங்கி உள்ளது பேசும் பொருளாகி உள்ளது. Cloudflare பிரச்சனை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி Cloudflare விளக்கம் அளித்துள்ளது.
Cloudflare என்பது அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய நெட்வொர்க் ஆகும்.இது வெப்சைட் மற்றும் ஆன்லைன் அப்ளிகேஷன்களின் பெர்மாமன்ஸ்க்கான பாதுகாப்பு உள்பட பிற சேவைகளை வழங்குவதை உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் தான் Cloudflare சார்பில், ‛‛பல வாடிக்கையாளர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி கிளவுட்ஃப்ளேர் அறிந்துள்ளது. முழு விஷயத்தையும் அறிந்து கொண்டு பிரச்சனையை தணிக்க பணியாற்றி வருகிறோம். விரைவில் புதிய அப்டேட்டை வழங்குவோம்'' என தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications