வெள்ள அபாய எச்சரிக்கை.. காவிரி ஆற்றங்கரையோரம் மக்கள் செல்ல வேண்டாம்.. அவசர உதவி எண் அறிவிப்பு!
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். 94458 69848 என்ற வாட்ஸ் எண் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்வதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.51 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 1.51 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியில் இருந்து 110.76 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 79.49 டிஎம்சி ஆக உள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர் திறப்பு வினாடிக்கு 5,000 கன அடியாக உள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்க உத்தரவிட்டதை அடுத்து மேட்டூர் அணை இன்று மாலை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வருகிறது காவிரி நீர்.
குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப் பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் சேமிப்பதற்கு ஏற்றவாறு அணை திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிக அளவு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திட வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். காவிரி ஆற்றில் நீர் திறப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகளை வைத்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், காவிரி கரையில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை செய்திகளை மக்களுக்கு உரிய நேரத்தில் சேர்க்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு தொடர்பாக மக்கள் 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம் என்றும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications