உலகிலேயே ஆடம்பர விமானம்! விஜய் பயணிக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் இவ்ளோ வசதிகள் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று இரவு சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து லண்டனுக்கு புறப்படுகிறார். முதல்வர் விஜய் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணிக்க உள்ளார். விஜய் பயணம் செய்யும் இந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகிலேயே ஆடம்பர சொகுசு வசதிகளுக்கு பெயர் போன விமான நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் உயர் ரக மாடல் விமானங்களில் அதி நவீன சொகுசு வசதிகள் உள்ளன.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் இன்று இரவு லண்டன் புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன செல்கிறார். வழக்கமாக தனி விமானத்தில் பயணம் செய்யும் முதல்வர் விஜய், இந்த முறை பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.

Emirates flights that TN Chief Minister Vijay travels on have so many amenities

ஆடம்பர சொகுசு விமானம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் விஜய் துபாய் செல்கிறார். துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து துபாய் வரை முதல்வர் விஜய் பயணிக்க இருப்பதாக கூறப்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆடம்பர சொகுசு வசதிகளுக்கு பெயர் போனதாகும். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் ஆடம்பர வசதிகள் உள்ளன.

எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனம், துபாய் அரசுக்கு சொந்தமானது ஆகும். உலகிலேயே மிகவும் ஆடம்பரமான பயண அனுபவத்தை தரும் விமானங்களில் ஒன்றாக எமிரேட்ஸ் இருந்து வருகிறது. இந்த விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள், தங்களுக்கெனெ பிரத்யேக அறை போல தனி வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்று கொண்டிருந்தாலும் இந்த விமானத்திற்குள்ளேயே குளிப்பதற்கு ஷவர், ஸ்பா வசதி உள்ளது.

விமானத்திற்கு உள்ளேயே சொகுசு உணவக வசதி

Emirates flights that TN Chief Minister Vijay travels on have so many amenities

இதில் பிரிமீயம் ரக ஆடம்பர சோப்புகள், துண்டுகள் பயணிகளுக்காக வழங்கப்படும். முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் சக பயணிகளுடன் உரையாடவும், பானங்கள், தின்பண்டங்கள் , நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றை ருசிக்க விமானத்திற்கு உள்ளேயே சொகுசு உணவக வசதி உள்ளது. எப்போது பசிக்கிறதோ அப்போது ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

உலகத்தரம் வாய்ந்த செப்- களால் தயாரிக்கப்படும் பிரிமீயம் உணவுகள், ஒயின்கள் இங்கு பரிமாறப்படும். பயணத்தின் போது இரவு உடுத்திக்கொள்ள மென்மையான ஆடைகள், செருப்புகள் மற்றும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்கின் கேர் பொருட்கள் அடங்கிய கிட்கள் இலவசமாக வழங்கப்படும். முதல் வகுப்பு பயணிகளுக்கு விமான பயணம் முழுவதும் அன்லிமிடெட்டு இணைய வசதி இலவசமாக கொடுக்கப்படும்.

அஜித்தை சந்திக்க இருப்பதாகவும் தகவல்

முதல்வர் விஜய் பயணம் செய்ய இருக்கும் விமானம் எமிரேட்ஸ் விமானத்தின் எந்த மாடலை சேர்ந்தது என்பதற்கு ஏற்ப அதில் உள்ள வசதிகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு வார காலம் லண்டன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் முதல்வர் விஜய், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அதேபோல, அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் லண்டனில் பார்வையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட இருக்கிறார். லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிறகு, வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை முதல்வர் விஜய் சென்னைக்கு வருவார் என்று தகவல்கள் கூறுகின்றன. முதல்வரான பின் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாடு சுற்றுப்பயணம் இதுவேயாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+