க்யூட்! 8 மணிக்கே வந்துட்டேன்..ஹாய் சொன்னா கூட ஆறுதலா இருக்கும்.. விஜய் வீடு முன் அழுத குட்டி ரசிகர்
சென்னை: காலை 8 மணிக்கே விஜயை பார்க்க வந்துவிட்டோம்.. குறைந்தது ஒரு ஹாய் சொன்னாலே ஆறுதல் அடைவோம் என்று சிறுவன் ஒருவர் குரல் உடைந்து அழுது கொண்டே பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வீட்டிற்கு வந்த குட்டி ரசிகர்கள், ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், அவரின் கடைசி படமாக ஜனநாயகன் அமைந்துள்ளது. இந்த நிலையில் அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் அவரின் பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது.

தவெக நலத்திட்ட உதவிகள்
ஜனநாயகன் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், விஜய் தவெகவின் கட்டமைப்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பிறந்தநாளையொட்டி தவெகவினர் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குவிந்த ரசிகர்கள்
இதனிடையே விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை பனையூர் அலுவலகத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் நாயகனாகவே இருப்பதால், விஜய் இந்த பிறந்தநாளிலும் யாரையும் சந்திக்கவில்லை. இருப்பினும் இன்று காலை முதலே விஜயின் பனையூர் அலுவலகத்திலும், நீலாங்கரை வீட்டின் முன்பாகவும் பலரும் கூடி வருகின்றனர்.
குட்டி ரசிகர்
காலை முதல் விஜயின் குட்டி ரசிகர்கள் கூடி இருக்கும் நிலையில், விஜய் யாரையும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் விஜயை சந்திக்க முடியாததால், குட்டி ரசிகர் ஒருவர் மனமுடைந்து பேசிக் கொண்டிருந்த போதே அழும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதனை க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கண்ணீருடன் சிறுவன்
அந்த குட்டி ரசிகர்கள் பேசுகையில், நாங்கள் எல்லோரும் காலை 8 மணிக்கு வந்தோம். சாப்பிடக் கூட இல்லை. எங்க லேட்டாகிருமோ, அவர் வந்துவிட்டு சென்றுவிடுவாரோ என்று வேகமாக வந்தோம். குறைந்தது, விஜய் வந்து ஹாய் சொல்லிவிட்டு சென்றால் கூட ஆறுதலாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, குரல் உடைந்தது. அப்போது அருகில் இருந்தவர் அழுகிறியாப்பா என்று கேட்க, தளபதியை ரொம்ப பிடிக்கும்.
மனமுடைந்த ரசிகர்கள்
வீட்டில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை அங்கிள் என்று கண்ணீரை துடைத்து கொண்டார். இன்னும் சில பெண்களும் அங்கு காத்திருக்க, ஒருவர் கைக்குழந்தையுடன் காத்திருந்தார். அதேபோல் தவெக கட்சி துண்டை அணிந்து கொண்டு பலரும் விஜய்-ன் ஒரு கையசைவுக்காக காத்திருந்தனர். விஜயை பார்க்க முடியாத சோகத்தில் சிலர், அவரின் வீட்டின் முன்பு செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications